Pattamboochi

"அஜித் & விஜய் ஆட.. ஒரு மாஸ் BGM-ல ரஜினி entry" - Behindwoods விருது விழாவில் ஜானி மாஸ்டர் தெறி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரைப்படத் துறையை சேர்ந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் மரியாதைக்குரிய Behindwoods gold medals விருதுகள் மக்களுக்கு அபிமானவை.

Ajith Vijay Rajini dance together Jani Master wish BGM 2022

Also Read | "Beast-ல விஜய் கொடுத்த Suprise" - Behindwoods Gold Medal விருது விழாவில் ஜானி மாஸ்டர் நெகிழ்ச்சி

சமூக சாதனையாளர்களை கவுரவிக்கும் Behindwoods gold Icons - Honour of Inspiration, இசை மற்றும் பாடல் துறை சாதனையாளர்களை கவுரவிக்கும் Behindwoods mic awards மற்றும் Behindwoods விருதுகளின் மற்றுமொரு அங்கமாக டிஜிட்டல் மற்றும் சோஷியல் மீடியா துறைகளில் சாதனை படைப்பவர்களை கவுரவிக்கும் பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு டிஜிட்டல் & டிவி விருதுகள் (Behindwoods Gold Digital & TV Awards) வழங்கும் விழாக்களும் ஏகோபித்த நன்மதிப்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது 8வது Behindwoods Gold Medals விருதுகள் வழங்கும் விழா அண்மையில் நிகழ்ந்தது.

இந்நிகழ்வுக்கு வேற லெவலில் வேட்டி கட்டிய தமிழராகவே மாறி வந்திருந்தார் பிரபல தென்னிந்திய முன்னணி நடனக்கலைஞர் ஜானி மாஸ்டர். அவருக்கு பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு மெடல் 8வது எடிஷன் வழங்கும்  “சிறந்த நடன இயக்கத்துக்கான” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Ajith Vijay Rajini dance together Jani Master wish BGM 2022

விருதுபெற்ற பின்பு இந்நிகழ்வில் பேசிய ஜானி மாஸ்டர், முன்னதாக நடிகர் விஜய் பீஸ்ட் படத்தில் தனது பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸாக கேக் எடுத்து வந்து வெட்டிக் கொண்டாடியது குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது ஜானி மாஸ்டரிடம், “மாஸ்டர் அப்போ உங்களது அடுத்த பிறந்தநாளை அஜித் குமாருடன் கொண்டாடுவீர்களா..?” என தொகுப்பாளினி பிரியங்கா கேட்டார்.

அப்போது பேசிய ஜானி மாஸ்டர், “அஜித் சாருடன் பணிபுரிய மிகவும் ஆர்வமாக உள்ளேன்.. அதற்காக காத்திருக்கிறேன். ஆனால் எனக்கு ஒரு கோரிக்கை இருக்கிறது? நான் நடன இயக்குனராக அஜித் மற்றும் விஜய் இருவரும் ஒன்றாக நடனம் ஆடுவதை இயக்க வேண்டும். அதை நீங்கள் திரை அரங்கில் காணவேண்டும். மற்றும் அதில் ஒரு சிறப்பான பிண்ணனி இசையில் ரஜினி சார் வந்து நடனம் ஆட வேண்டும். இந்த மூவருடனும் பணியாற்ற வேண்டும்!” என்று கூறினார்.

Ajith Vijay Rajini dance together Jani Master wish BGM 2022

அப்போது பேசிய தொகுப்பாளினி பிரியங்கா,  “உலகம் முழுவதும் இதே கோரிக்கை உள்ளது சார்.. சரி அப்படியானால் இதில் நடனம் ஆடப்போகும் நடிகை யார்?” என்று கேட்டார். அதற்கும் பதில் அளித்த ஜானி மாஸ்டர், “இந்த மூன்று பேரும் திரையில் வரும்பொழுது ஹீரோயினை மக்கள் பார்க்க மாட்டார்கள்.  வேஸ்ட்..” என்று கூறினார்.

Also Read | "அஜித் & விஜய்யை ஒரே நடனத்துல.." - Behindwoods Gold விருது விழாவில் ஜானி மாஸ்டர் மாஸ் பேச்சு.!

"அஜித் & விஜய் ஆட.. ஒரு மாஸ் BGM-ல ரஜினி ENTRY" - BEHINDWOODS விருது விழாவில் ஜானி மாஸ்டர் தெறி..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Vijay Rajini dance together Jani Master wish BGM 2022

People looking for online information on Ajith, Arabic Kuthu, BeastVijay, Behindwoods Awards 2022, Behindwoods Gold Medal Award, Behindwoods Gold Medals, BGM 2022, BGM8, Jani Master, Rajinikanth, Thalapathy Vijay will find this news story useful.