ஜீவா, ‘மிர்ச்சி’ சிவா & யோகி பாபு நடிப்பில் ‘கோல்மால்’… First look உடன் வெளியான ரிலீஸ் Update

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜீவா, யோகி பாபு மற்றும் மிர்ச்சி சிவா நடிக்கும் ‘கோல்மால்’ படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Jiiva yogi babu siva golmaal movie first look

Also Read | “காலத்துக்கும் நிக்கும்…” விக்ரம் படத்தில் Applause அள்ளிய யுடியூபர்கள்… வெளியிட்ட வீடியோ

கோல்மால்

ஜாகுவார் ஸ்டுடியோஸின் பி வினோத் ஜெயின் தயாரிப்பில் பொன்குமரன் இயக்கத்தில் ஜீவா-மிர்ச்சி சிவா மற்றும் யோகி பாபு உள்ளிட்டவர்கள் நடிக்கும் படம் ‘கோல்மால்’. கோல்மாலின் ஒளிப்பதிவை எஸ் சரவணன் கையாள, அருள் தேவ் இசையமைக்கிறார். படத்தொகுப்புக்கு டான் போஸ்கோவும், கலை இயக்கத்திற்கு சிவாவும், பாடல் வரிகளுக்கு மதன் கார்க்கி, விவேகா ஆகியோரும் பொறுப்பேற்றுள்ளனர்.

Jiiva yogi babu siva golmaal movie first look

படப்பிடிப்பு

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் மொரீஷியஸில் தொடங்கியது. பின்னர் சென்னையில் சில முக்கிய காட்சிகளை படமாக்கிய பின்னர் மீண்டும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் மொரிஷியஸுக்கு திரும்பி படப்பிடிப்பு நடத்தினர். மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்த நிலையில் ரிலீஸ் வேலைகள் நடந்து வருகின்றன.

Jiiva yogi babu siva golmaal movie first look

படம் பற்றி இயக்குனர்…

இந்த படத்தின் இயக்குனர் பொன் குமரன் படம் பற்றி, "ஜீவா மற்றும் சிவா ஆகிய இருவரும் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். கோல்மால் படத்தில் அவர்களின் கெமிஸ்ட்ரியும் பேசப்படும். பாயல் ராஜ்புத், தான்யா ஹோப், யோகி பாபு, ஆடுகளம் நரேன், மனோபாலா, சுப்பு பஞ்சு,வையாபுரி, யூகி சேது, சஞ்சனா சிங், சாது கோகிலா, விபின் சித்தார்த், ரமேஷ் கண்ணா, கேஎஸ்ஜி வெங்கடேஷ், மாளவிகா, ஜார்ஜ் மரியன் மற்றும் மது சினேகா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்,” என்று தெரிவித்திருந்தார்.

Jiiva yogi babu siva golmaal movie first look

கவனம் ஈர்த்த போஸ்டர்…

இந்நிலையில் தற்போது படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. போஸ்டரில் நடிகர்களோடு புலி, சிறுத்தை, ஒட்டகச்சிவிங்கி போன்ற விலங்குகளும் இடம்பெற்றுள்ள்தால் விலங்குகள் சம்மந்தப்பட்ட படமாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. படத்தை செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Also Read | லைகா சுபாஷ்கரனோடு ‘டான்’ Team… 25 ஆவது நாள் கொண்டாட்டம்… வைரல் புகைப்படம்

தொடர்புடைய இணைப்புகள்

Jiiva yogi babu siva golmaal movie first look

People looking for online information on Golmaal movie, Golmaal movie first look, Jiiva, Siva, Yogi Babu will find this news story useful.