RRR Others USA
www.garudabazaar.com

“அவர் மேல மதிப்பு வச்சிருக்கேன்”… மூத்த நடிகரைப் பற்றி கூறிய யோகி பாபு! இயக்குனரின் viral tweet!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் மோகன் நடிக்கும் புதிய படமான ஹரா படத்தில் நடிகர் யோகி பாபு நடிக்க உள்ளதை இயக்குனர் விஜய் ஸ்ரீ உறுதி செய்துள்ளார்.

Yogi babu joined mohan re entry hara movie

“மிரட்டும் டிரைலர்!.. அசுரன், ஜெய்பீம் நடிகரின் இயக்கத்தில் 'டாணாக்காரன்' ..

வெள்ளி விழா நாயகன்…

80'ஸ் மற்றும் 90'ஸ் காலகட்டங்களில், தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகர் மைக் மோகன் தான். பல படங்களில் பாடகராக நடித்ததால் இவரை ரசிகர்கள் செல்லமாக மைக் மோகன் என்று அழைத்து வந்தனர். அதுபோல இவர் நடித்த பல படங்கள் வெள்ளி விழா என சொல்லப்படும் 175 நாட்கள் ஓடியப் படங்களாக அமைந்தன. அதனால் வெள்ளி விழா நாயகன் மோகன் என்றும் அழைக்கபட்டார்.

Yogi babu joined mohan re entry hara movie

ரி எண்ட்ரி ஹரா….

இதையடுத்து இவர் 1990 களுக்கு பிறகு சினிமாவில் அதிகமாக நடிக்கவில்லை. கடைசியாக சுட்டப்பழம் என்ற தமிழ்ப் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அதன் பின்னர் தற்போது  ஹரா என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். ஹரா படத்தை தாதா 89 மற்றும் பவுடர் ஆகிய படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீ இயக்குகிறார். ஏராளமான ரசிகர்களுக்கு, ஒரு காலத்தில் ஃபேவரைட்டாக இருந்த நடிகர் மோகனின் ரீ என்ட்ரி, பலரையும் குதூகலப்படுத்தியுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகை குஷ்பூவும் நடிக்க உள்ளதாக வெளியான அறிவிப்பு படத்தின் மேல் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Yogi babu joined mohan re entry hara movie

ஹரா அப்டேட்…

ஹரா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இந்நிலையில், ஹரா திரைப்படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் டைட்டில் டீசர், வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மோகனை பல ஆண்டுகளுக்கு பிறகு, திரையில் பார்க்க இருக்கும் ரசிகர்கள், டைட்டில் டீசரில் மோகனின் லுக் எப்படி இருக்கும் என்பதைக் காணவும் அதிக ஆவலுடன் உள்ளனர்.

Yogi babu joined mohan re entry hara movie

படத்தில் இணைந்த யோகிபாபு….

இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தில் யோகி பாபு ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க உள்ளதை படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ அறிவித்துள்ளார். மேலும் இதுபற்றிய டிவீட்டில் ‘நடிகர் யோகி பாபு "ஹரா படத்தில் நடிக்க சம்மதித்ததில் மோகன் தன் மகிழ்ச்சியை தெரியபடுத்தினார்….  அதேபோல் நடிகர் யோகி பாபுவும் மோகன் சார் மீது அளவற்ற மதிப்பும் மரியாதையும் இருப்பதை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.’ எனக் கூறியுள்ளார். முன்னணி நகைச்சுவைக் கலைஞராக இருக்கும் யோகி பாபு ஹரா படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடடே …ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மியூசிக் ஆல்பமா? இவங்களும் இருக்காங்களா? மாஸ் update!

தொடர்புடைய இணைப்புகள்

Yogi babu joined mohan re entry hara movie

People looking for online information on Haraa Movie, Haraa Movie Updates, Mohan, Vijay Sri G, Yogi Babu will find this news story useful.