‘தி லெஜண்ட்’ படத்தின் ஆடியோ & டிரைலர்… எப்போ? எங்கே?... வெளியான latest தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அருள்சரவணன் அறிமுகமாகும் ‘தி லெஜண்ட்’ படத்தின் ஆடியோ மற்றும் பாடல்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளன.

The legend movie audio trailer release on may 29th

Also Read | சென்னையில பிடிச்ச இடம் இதான்.. கீர்த்தி சுரேஷை குறிப்பிட்டு 'மாஸ்டர்' மாளவிகாவின் பதில்.!

சினிமாவில் அறிமுகமாகும் அருள் சரவணன்…

சரவணா ஸ்டோர்ஸின் விளம்பரப் படங்கள் மூலம் தமிழக மக்களிடையே பிரபலம் அடைந்தவர் அந்த கடைகளின் அதிபர் அருள் சரவணன். இதைத் தொடர்ந்து தற்போது கதாநாயகனாக அடியெடுத்து வைத்துள்ளார். அவர் நடிப்பில் ஜேடி –ஜெர்ரி விளம்பர பட இயக்குனர்கள் இயக்கும் புதிய படத்துக்கு ’தி லெஜண்ட்’ என்றே பெயர் வைக்கபப்ட்டுள்ளது. இயக்குனர்கள் ஜேடி – ஜெர்ரி இதற்கு முன்னர் உல்லாசம் மற்றும் விசில் ஆகிய படங்களை இயக்கியவர்கள். அதன் பிறகு நூற்றுக்கணக்கான விளம்பர படங்களை இயக்கியவர்கள். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களையும் அவர்களே இயக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

The legend movie audio trailer release on may 29th

பிரம்மாண்ட கூட்டணி…

லெஜண்ட் படத்தில் சரவணாவுக்கு ஜோடியாக ரித்திகா திவாரி நடிக்கிறார். நகைச்சுவை நடிகர்கள் யோகிபாபு, ரோபோ சங்கர், பிரபு, நாசர், மயில்சாமி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மறைந்த நடிகர் விவேக்கும் இப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி ரூபன் எடிட்டிங் பணியை செய்ய, அனல் அரசு சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து ரிலீஸ் வேலைகள் தொடங்கியுள்ளன. படத்தின் முன்னோட்டமாக சில போஸ்டர்களும் மோஷன் போஸ்டர்களும் ரிலீஸாகி கவனத்தை ஈர்த்தன.

The legend movie audio trailer release on may 29th

இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான Mosalo mosalu (மொசலோ மொசலு) சமீபத்தில் வெளியாகி சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. அதையடுத்து இரண்டாவது சிங்கிள் பாடலான ‘வாடிவாசல்’  மே 20 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

The legend movie audio trailer release on may 29th

ஆடியோ & டிரைலர்…

இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வரும் மே 29 ஆம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் கமலின் விக்ரம் படத்தின் பாடல்கள் மற்றும் ஆடியோ ரிலீஸும் அங்குதான் நடந்தது என்பது குறிப்பிடத்தகக்து.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

The legend movie audio trailer release on may 29th

People looking for online information on அருள்சரவணன், தி லெஜண்ட், Second single Vaadivaasal release, The Legend movie, The legend movie audio trailer will find this news story useful.