‘தளபதி 66’ Team உடன் தெலங்கானா முதல்வரை சந்தித்த விஜய்… தீயாய் பரவும் புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை சந்தித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Actor vijay met telangana CM with Thalapathy 66 crew

புதுக் கூட்டணியில் தளபதி 66…

பீஸ்ட் திரைப்படத்துக்குப் பிறகு ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் இந்த படம் ஆக்ஷனுக்கு நிகராக குடும்ப செண்ட்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. வம்சி இந்த படத்தை இயக்குகிறார்.

Actor vijay met telangana CM with Thalapathy 66 crew

முன்னணிக் கலைஞர்கள்…

கடந்த மாதம் இந்த படத்தின் பூஜை சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜூ, ராஷ்மிகா மந்தனா, நடிகர் விஜய் கலந்து கொண்டனர். இந்த பூஜையில் நடிகர் சரத்குமாரும் கலந்து கொண்டுள்ளார். இந்த படத்தில் விஜய் உடன் முதல்முறையாக இணைந்து நடிக்க உள்ளார். இந்த படத்தில் எடிட்டராக பிரவீன் கே எல் இணைந்துள்ளார். தமன் முதல் முறையாக விஜய் படத்துக்கு இசையமைக்கிறார்.  நடிகர் ஷாம், பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ளது.

Actor vijay met telangana CM with Thalapathy 66 crew

முதல்வரை சந்தித்த விஜய்…

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடந்தது. அப்போது ஒரு பாடல்காட்சி படமாக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. அதன் பின்னர் தற்போது ஐதராபாத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் விஜய் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது படத்தின் இயக்குனர் வம்சி உள்ளிட்டவர்களும் விஜய்யுடன் சென்றுள்ளனர். சந்திப்பின் போது சந்திரசேகர ராவ் விஜய்க்கை சால்வை போர்த்தி நினைவுப் பரிசு ஒன்றையும் அளித்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்களும் வீடியோவும் இணையத்தில் இப்போது வேகமாக பரவி வருகின்றன.

Actor vijay met telangana CM with Thalapathy 66 crew

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

‘தளபதி 66’ TEAM உடன் தெலங்கானா முதல்வரை சந்தித்த விஜய்… தீயாய் பரவும் புகைப்படங்கள்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actor vijay met telangana CM with Thalapathy 66 crew

People looking for online information on Chandrasekara rao, Thalapathy 66, Vamsi, Vijay will find this news story useful.