RRR Others USA
www.garudabazaar.com

யோகி பாபு வீட்டில் விசேஷம்.. ஓடி வந்த சிவகார்த்திகேயன் என்ன பண்ணாருன்னு தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை : நடிகர் யோகிபாபுவின் மகன் விசாகனின் முதலாவது பிறந்த நாள் விழா அவரது வீட்டில் கோலாகலமாக நடந்தது. அதில் பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Yogi Babu Son first birthday grand celebration at home

தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்பவர் தான் யோகி பாபு. தனது Humour மற்றும் அசாத்திய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர்.

தற்போது இவர் கைவசம் இருக்கும் படங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்து இருந்தாலும் அவ்வப்போது தனி கதாநாயகனாகவும் சில படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் நடிகர் யோகிபாபு வீட்டில் நடந்த விசேஷம் ஒன்றில் எடுக்கப்பட்ட  பிரபலங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

RRRக்கு அப்பறம் "வலிமை" படம் வருது- மேடையில் ஸ்கோர் செய்த சிவகார்த்திகேயன்!

யோகி பாபுவின் திருமணம்:

Yogi Babu Son first birthday grand celebration at home

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் யோகிபாபுவின் சொந்த ஊரான செய்யாறு அருகில் மேல்நகரம்பேடு கிராமத்தில் மஞ்சு பார்கவி என்பவருடன்  யோகி பாபுக்கு எளிமையாக திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தனது வரவேற்பை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தார்.

வளைகாப்பு:

Yogi Babu Son first birthday grand celebration at home

தனது திருமண வரவேற்பை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில்  ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் வரவேற்பு தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு நாள் ஊரடங்கு போடப்பட்டது. இதனால் திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை. அதன்பின் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்திருந்தார். வளைகாப்பு நிகழ்ச்சிக்கு இரு தினங்களுக்கு முன்பாகவே யோகிபாபுவுக்கு ஆண் குழந்தை பிறந்து விட்டது.

ரிலீசான முதல் நாளே OTT-யில் சாதனை படைத்த தனுஷ் நடித்த புதிய படம்! என்ன சாதனை தெரியுமா?

மகன் பிறந்தநாள்:

Yogi Babu Son first birthday grand celebration at home

அதன்பின் திருமண வரவேற்பு, வளைகாப்பு என எதுவும் திட்டமிட்டபடி நடத்த முடியாமல் போனதால் தற்போது அவருடைய மகன் விசாகனின் முதல் பிறந்தநாளை மிகவும்  பிரம்மாண்டமாக கொண்டாடினார். இந்த விழாவில் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Yogi Babu Son first birthday grand celebration at home

இயக்குனர் நெல்சன், நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் உதயநிதி ஸ்டாலின்,பிக்பாஸ் வருண், இயக்குநர் கே எஸ் ரவிக்குமார், சுந்தர் சி- குஷ்பு  உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். விழாவில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், வீட்டின் உள்ளே நுழைந்தவுடன் யோகி பாபுவின் அம்மா காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். அவரது அந்த செயல் பலரின் கவனம் ஈர்த்துள்ளது. இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ  சமூகவலைதளங்களில் வைரலாக பரவுகிறது.

Yogi Babu Son first birthday grand celebration at homeYogi Babu Son first birthday grand celebration at home

யோகி பாபு வீட்டில் விசேஷம்.. ஓடி வந்த சிவகார்த்திகேயன் என்ன பண்ணாருன்னு தெரியுமா? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Yogi Babu Son first birthday grand celebration at home

People looking for online information on சிவகார்த்திகேயன், யோகி பாபு, Son first birthday, Vishakan Birthday, Yogi Babu will find this news story useful.