www.garudabazaar.com

யாஷிகா காலில் இவ்ளோ பெரிய கட்டா? மருத்துவமனையில் இருந்து வெளியிட்ட photo! ரசிகர்கள் ஆறுதல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் பிரபல நடிகை யாஷிகா ஆனந்த். அண்மையில் தான், இவர் ஈ.சி.ஆர் சாலையில் அதிவேகமாக காரில் சென்றபோது தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Yashika Hospital photo leaked leg fracture health recovering

இந்த விபத்து சம்பவத்தில் யாஷிகா ஆனந்தின் தோழி வள்ளிச்செட்டி பவானி உயிரிழந்ததை அடுத்து யாஷிகா ஆனந்தும் அவருடைய இரு ஆண் நண்பர்களும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இதில் யாஷிகா ஆனந்த் எழுந்து நடக்கவே 5 மாதம் ஆகும் என்கிற சூழ்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். மேலும் தன்னுடைய தோழி வள்ளிச்செட்டி பவானியின் உயிரிழப்பை அடுத்து பெரும் சோகத்தில் இருக்கும் யாஷிகா ஆனந்த், வாழ்நாள் முழுவதும் இந்த குற்ற உணர்ச்சியில் வாழ போவதாகவும், பவானியை ஒவ்வொரு கணமும் நினைத்துக்கொண்டே இருக்கப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான் மருத்துவமனையில் யாஷிகா ஆனந்த் காலில் கட்டுடன் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி அவருடைய ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. இருப்பினும் ரசிகர்களும் சரி, யாஷிகா ஆனந்தும் சரி பாசிட்டிவான மன நிலையில் விரைவில் உடல் நலம் தேறி வரவேண்டுமென்று உறுதியாக இருக்கின்றனர்.

Yashika Hospital photo leaked leg fracture health recovering

இந்த விபத்து சம்பவத்தினால், யாஷிகா ஆனந்தின் இடுப்பு எலும்பு மற்றும் வலது கால் எலும்பில் முறிவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனை அடுத்து சில மாதங்கள் அவர் ஓய்வில் இருந்து விரைவில் உடல் நலம் தேறி வரவேண்டும் என்று ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறி வருகின்றனர்.

யாஷிகா காலில் இவ்ளோ பெரிய கட்டா? மருத்துவமனையில் இருந்து வெளியிட்ட PHOTO! ரசிகர்கள் ஆறுதல்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Yashika Hospital photo leaked leg fracture health recovering

People looking for online information on Caraccident, Yashika Aannand, Yashikaaccident, YashikaHealth, YashikaHospital will find this news story useful.