www.garudabazaar.com

"என் friend Yashika!".. மனம் திறந்த பிரபல பிக்பாஸ் நடிகை!.. நெகிழ வைக்கும் பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நள்ளிரவில் நடிகை யாஷிகா ஆனந்த், சென்னை  - மாமல்லபுரம் ஈ.சி.ஆர்  சாலையில் அதிவேகமாக காரை இயக்கி சென்றபோது நடந்த விபத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Aishwarya Dutta tweet over Yashika Aannand health recover

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த திரைப்பட நடிகை யாஷிகா ஆனந்த், தம்முடைய இரு நண்பர்கள் மற்றும் ஒரு தோழியுடன் காரில் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது.

ALSO READ: யாஷிகா ஆனந்த்-ன் Car விபத்தில் உயிரிழந்த தோழி.. சகோதரி வெளியிட்ட நெஞ்சை உருக்கும் பதிவு!

இந்த விபத்து சம்பவத்தில் யாஷிகா ஆனந்த் மற்றும் அவருடைய இரு நண்பர்கள் ஆகியோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே விபத்தில் யாஷிகா ஆனந்தின் தோழியான வள்ளிசெட்டி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.

இதனிடையே யாஷிகா ஆனந்த் உடல் நலம் குறித்து பிரபல பிக்பாஸ் போட்டியாளரும், யாஷிகா ஆனந்தின் தோழியும், நடிகையுமான ஐஸ்வர்யா தத்தா, தமது ட்விட்டர் பக்கத்தில், “என் நண்பர் நன்றாக இருக்கிறார், விரைவில் நன்றாகிவிடுவார். அவருடைய மன உறுதி வலுவாக உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த விபத்து காரணமாக யாஷிகா ஆனந்த் மீது அதிவேகமாக காரை இயக்கியது, உயிர் சேதம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் யாஷிகா ஆனந்தின் டிரைவிங் லைசென்சையும் போலீசார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

ALSO READ: ICU-வில் யாஷிகா!.. கண் முழிச்சுட்டாரா? Multiple fractures-ஆ?.. Surgeries இருக்கா?.. சகோதரி emotional post!

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Dutta tweet over Yashika Aannand health recover

People looking for online information on Aishwarya Dutta, Yashika Aannand will find this news story useful.