www.garudabazaar.com

தடுப்புச்சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்த கார்.... யாஷிகா ஆனந்துக்கு கோர விபத்து.. தோழி பலி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பிக்பாஸ் நடிகை யாஷிகா ஆனந்த் மகாபலிபுரம் அருகே நடந்த கோர கார் விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது தோழி சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துள்ளதாக தெரிகிறது.

BiggBoss Yashika Aannand car accident her friend spot dead ECR

தமிழில் சந்தோஷ் பி ஜெயகுமார் இயக்கத்தில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இளம் நடிகை யாஷிகா ஆனந்த். இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இன்னும் ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இன்னும் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். பெரும்பாலும் தமது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், தமது தோழிகளுடன் ஹேங் அவுட்ஸில் ஈடுபடுவார். அந்த புகைப்படங்களை இவரது  இன்ஸ்டாகிராமில் பார்க்க முடியும்.

BiggBoss Yashika Aannand car accident her friend spot dead ECR

மாடலிங் துறையிலும் பிரபலமான யாஷிகா ஆனந்த்  நேற்றைய தினம் (24-07-2021) தன் தோழிகளுடன் கிழக்கு கடற்கரை சாலை மகாபலிபுரம் அருகே நள்ளிரவில் சென்றுகொண்டிருந்த போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஆம், யாஷிகா ஆனந்த் சென்ற கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதியதுடன்,  தலைகீழாக கவிழ்ந்து கோர விபத்துக்குள்ளானது.

BiggBoss Yashika Aannand car accident her friend spot dead ECR

இந்த விபத்தில் யாஷிகா ஆனந்த் பலத்த படுகாயம் அடைந்ததை அடுத்து, அவரும் படுகாயம் அடைந்த நண்பர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூர விபத்தில் யாஷிகாவின் தோழியான வள்ளிச்செட்டி பவானி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தடுப்புச்சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்த கார்.... யாஷிகா ஆனந்துக்கு கோர விபத்து.. தோழி பலி! வீடியோ

BiggBoss Yashika Aannand car accident her friend spot dead ECR

People looking for online information on Yashika anand interviewyashika anand hotyashika anand in dhuruvangal pathinaaruyashika anand latest interviewiruttu arayil murattu kuththu scenesiruttu arayil murattu kuththu interviewiruttu arayil murattu kuththubig boss 2 contestants in tamilbig bo will find this news story useful.