www.garudabazaar.com

#YashikaAanand: கார் Accident-க்கு முன், இறந்த தோழி 'வள்ளிச்செட்டி' பவானி எடுத்த Video-வா இது..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த், காரில் சென்றபோது விபத்து ஏற்பட்டு, அவருடைய தோழி சம்பவ இடத்தில் பலியான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Yashika Aanand friend bhavani taken video before car accident

மாமல்லபுரம் ECR சாலையில், நள்ளிரவு தமது தோழி மற்றும் இரு நண்பர்களுடன் காரில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாஷிகா ஆனந்த் மற்றும் அவருடைய நண்பர்கள் பலத்த படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் யாஷிகா ஆனந்தின் தோழி வள்ளிச்செட்டி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

நடிகை யாஷிகா ஆனந்த், அதிவேகமாக காரை இயக்கியதாக கூறப்படும் நிலையில், சாலையில் இருந்த தடுப்புச்சுவர் மோதி, கார் தலைகுப்புற கவிழ்ந்து இந்த விபத்து ஏற்பட்டதாகவும், விபத்து ஏற்பட்டவுடன் அக்கம்பக்கத்தினர் இவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்திருக்கின்றன.

இதனிடையே வேகமாக கார் ஓட்டியது, உயிர் சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக 3 பிரிவுகளின் கீழ் யாஷிகா ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்தான் யாஷிகா ஆனந்தின், தோழி வள்ளிச்செட்டி பவானி பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அமெரிக்காவில் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் இவர் யாஷிகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி இருக்கின்றன.

இதேபோல் விபத்து நடப்பதற்கு முன் காரில் இருந்தபடி யாஷிகா ஆனந்தை வீடியோ எடுத்து பதிவிட்டிருக்கிறார்கள். இந்த வீடியோவை வள்ளிச்செட்டி பவானி எடுத்திருப்பதாக தெரிகிறது. இந்த வீடியோவும் தற்போது வெளியாகியிருக்கிறது.

நடிகை யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#YASHIKAAANAND: கார் ACCIDENT-க்கு முன், இறந்த தோழி 'வள்ளிச்செட்டி' பவானி எடுத்த VIDEO-வா இது..? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Yashika Aanand friend bhavani taken video before car accident

People looking for online information on Yashika Aannand will find this news story useful.