FDFS டிக்கெட் வாங்கிடேன் - 'பிகில்' தீபாவளி கொண்டாட தயரான பிரபல நடிகை
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Oct 24, 2019 09:46 AM
தளபதி விஜய் அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் நடித்து தீபாவளியை முன்னிட்டு வெளியாகவிருக்கிற படம் 'பிகில்'. அட்லி இயக்கும் இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், இந்துஜா, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
இந்நிலையில் பிகில் படத்தின் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டதாக நடிகை யாஷிகா ஆனந்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.மேலும் படம் பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
First day first show booked 😍 #Bigil #BigilDiwali ❤️❤️ can’t wait !!
— Yashika Aannand (@iamyashikaanand) October 23, 2019