www.garudabazaar.com

“பாய் ஃப்ரன்ட் இல்லனா என்ன.. இது தான் முக்கியம்” - ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்த தரமான Post..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் சினிமாவில் முதன்மை நடிகைகளின் ஒருவராக விளங்கி வருகிறார்.

What if No Boyfriend have Biryani Aishwarya Rajesh viral post

ஆரம்பத்தில் சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வந்த இவர், பின்னாட்களில் காக்கா முட்டை திரைப்படத்தின் மூலம் தம்முடைய அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தினார். தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ், வடசென்னை உள்ளிட்ட படங்களில் நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.

இதேபோல், கனா உள்ளிட்ட முதன்மை பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் தனித்தும் நடித்து புகழ்பெற்றார். அண்மைக் காலங்களில் க/பெ ரணசிங்கம், டிரைவர் ஜமுனா , தி கிரேட் இந்தியன் கிச்சன் தமிழ் பதிப்பு ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். கடைசியாக ஆர்.ஜே பாலாஜியுடன் இணைந்து ரன் பேபி ரன் படத்தில் நடித்திருந்தார்.

 

இந்நிலையில்தான் காதலர் தினத்தை முன்னிட்டு தம்முடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்த ஐஸ்வர்யா ராஜேஷ், “பாய் ஃபிரண்டு இல்லனா என்ன? நமக்கு பிரியாணி தான் முக்கியம்” என்று ஜாலியாக பதிவிட்டு வீடியோவை பதிவிட்டுள்ளார். இதை பலரும் ஆமோதித்து உண்மைதான் என சொல்லி கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

What if No Boyfriend have Biryani Aishwarya Rajesh viral post

People looking for online information on Aishwarya Rajesh, Valentines Day will find this news story useful.