www.garudabazaar.com

"இனிமே சந்தியாவா நான் இல்ல".. ராஜா ராணி 2 நடிகை ரியா வெளியிட்ட வீடியோ!!.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மெகா ஹிட் ஆன சீரியல் 'ராஜா ராணி'. இந்த தொடரின் முதல் பாகத்தில் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஆகியோர் நடித்திருந்தனர். செம்பா கதாபாத்திரத்தில் ஆல்யாவும் சின்னைய்யா கதாபாத்திரத்தில் சஞ்சீவும் நடித்திருந்த சூழலில் மக்கள் மத்தியில் இவர்கள் இருவரும் பிரபலமாக காரணமாகவும் இந்த தொடர் அமைந்திருந்தது.

Raja Rani 2 Serial actress riya out from the serial new video

Images are subject to © copyright to their respective owners

அதேபோல இந்த தொடருக்கு மத்தியில் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஆகியோர் காதலித்து திருமணமும் செய்து கொண்டனர்.

ராஜா ராணி தொடரின் முதல் பாகம் வெற்றி பெற்றதன் காரணமாக இரண்டாவது பாகமும் ஆரம்பமாகி தற்போது அசத்தலான வரவேற்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆல்யா, 2 ஆவது முறையாக கர்ப்பம் அடைந்ததன் காரணமாக தொடரில் இருந்தும் விலகி இருந்தார். ராஜா ராணி 2 தொடரில் போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவுடன் வரும் சந்தியா என்னும் கதாபாத்திரத்தில் அவர் நடித்து வந்தார்.

இதனிடையே, கர்ப்பம் அடைந்ததன் காரணமாக ஆல்யா விலகவே சந்தியா கதாபாத்திரத்தில் ரியா என்ற நடிகையும் நடித்து வந்தார். போலீஸ் அதிகாரி கனவுடன் வலம் வந்த ரியா, கடைசியில் உயர் அதிகாரி ஆன சூழலில், அதிரடி ஆக்ஷன் சண்டைக் காட்சிகள் என விறுவிறுப்புடனும் இந்த தொடர் சென்று கொண்டிருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners

இந்த நிலையில், தற்போது ஒரு பரபர தகவலை நடிகை ரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் பேசும் ரியா, "ராஜா ராணி 2 தொடரில் நான் நடிக்க ஆரம்பித்து ஒரு வருடங்கள் ஆக போகிறது. இந்த வருடத்தில் நான் எந்த வீடியோவும் போடவில்லை. அதனால் இப்போது போடுகிறேன் ஏனென்றால் நான் இனி ராஜா ராணி 2 தொடரில் இல்லை. இனி நான் சந்தியா இல்லை, சந்தியாவாக வேறு ஒருவர் நடிக்கப் போகிறார். அவர்களுக்கு உங்கள் ஆதரவை கொடுங்கள்" எனக்கூறி வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரியா பகிர்ந்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners

ராஜா ராணி 2 தொடர் காரணமாக, மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றிருந்த நடிகை ரியா திடீரென தற்போது தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது ராஜா ராணி தொடரின் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Riya (@riya.vishwanathan)

 

தொடர்புடைய இணைப்புகள்

Raja Rani 2 Serial actress riya out from the serial new video

People looking for online information on Raja Rani 2, Riya will find this news story useful.