www.garudabazaar.com

கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் திருமணம்.‌. GVM முதல் PBS வரை பிரபலங்களின் வைரல் PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

Wedding Photos of Gautam Karthik Manjma Mohan

கடல் (2012) திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானவர்,  நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். அதனைத் தொடர்ந்து 'ரங்கூன்', 'முத்துராமலிங்கம்', 'தேவராட்டம்' போன்ற பல படங்களில் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். தற்போது 1947, பத்து தல படங்களில் நடித்து வருகிறார்.

Wedding Photos of Gautam Karthik Manjma Mohan

அதேபோல கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த  'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இதனைத் தொடர்ந்து தமிழில் கௌதம் கார்த்திக் உடன் இவர் இணைந்து 'தேவராட்டம்', விஷ்ணு விஷாலின் 'எஃப்ஐஆர்' மற்றும் விஜய் சேதுபதியுடன் 'துக்ளக் தர்பார்' படங்களில் நடித்துள்ளார்

Wedding Photos of Gautam Karthik Manjma Mohan

Wedding Photos of Gautam Karthik Manjma Mohan

சில நாட்களுக்கு முன் நடிகர் கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டனர். மேலும் தாங்கள் காதலிப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

Wedding Photos of Gautam Karthik Manjma Mohan

இன்று சென்னையில் குடும்பத்தினர் முன்னிலையில் தனியார் நிகழ்வாக மஞ்சிமா மோகன் & கௌதம் கார்த்திக் திருமணம் நடைபெற்றது.  நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

Wedding Photos of Gautam Karthik Manjma Mohan

இவர்களின் திருமண புகைப்படங்கள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியாகி உள்ளன. நடிகர் கௌதம் கார்த்திக்கின் தந்தை கார்த்திக் மணமக்களை வாழ்த்திய புகைப்படம், இயக்குனர் கௌதம் மேனன், நடிகை பிரியா பவானி சங்கர், மேகா ஆகாஷ், தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோர் திருமணத்தில் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் திருமணம்.‌. GVM முதல் PBS வரை பிரபலங்களின் வைரல் PHOTOS! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Wedding Photos of Gautam Karthik Manjma Mohan

People looking for online information on Gautham Karthik, GVM, Manjima Mohan, PBS will find this news story useful.