VTK D Logo Top
www.garudabazaar.com

VTK: வெந்து தணிந்தது காடு.. கௌதம் மேனன் & சிம்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்ட சூர்யா! சூப்பர்ல

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'வெந்து தணிந்தது காடு' படத்தின் ரிலீஸ் குறித்து நடிகர் சூர்யா  தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Suriya Tweet about Vendhu Thanindhathu Kaadu STR GVM AR Rahman

Also Read | 'வெந்து தணிந்தது காடு'.. வெளியான சென்னை & செங்கல்பட்டு ஏரியா தியேட்டர் லிஸ்ட்!

வெந்து தணிந்தது காடு படம் இன்று செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தினை தமிழகம் முழுவதும்  உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது.

வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கதாநாயகனாக 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். சிம்புக்கு ஜோடியாக  நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Suriya Tweet about Vendhu Thanindhathu Kaadu STR GVM AR Rahman

கௌதம் மேனனுடன் எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்திற்காக முதல் முறையாக எழுத்தாளராக இணைந்துள்ளார். கவிஞர் தாமரை பாடலாசிரியராக பணிபுரிந்துள்ளார். கலை இயக்குனராக ராஜிவ் நாயரும், உடை வடிவமைப்பாளராக கௌதம் மேனனின் தங்கை உத்தாரா மேனனும் பணிபுரிந்துள்ளனர். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Suriya Tweet about Vendhu Thanindhathu Kaadu STR GVM AR Rahman

'வெந்து தணிந்தது காடு’  படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

Suriya Tweet about Vendhu Thanindhathu Kaadu STR GVM AR Rahman

இந்நிலையில் நடிகர் சூர்யா வெந்து தணிந்தது காடு படம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.  அந்த பதிவில், "வெந்து தணிந்தது காடு படம் பற்றி நல்ல விஷயங்களை கேள்விப்படுகிறேன்.. படத்தை பார்க்க காத்திருக்கிறேன்.. கௌதம் மேனனுக்காக மகிழ்ச்சி அடைகிறேன்.

Rock on சிம்பு.. மிகப்பெரிய வெற்றிக்கு படக்குழுவுக்கு வாழ்த்துகள்" என சூர்யா ட்வீட் செய்துள்ளார்.

 

Also Read | "இந்த படம் இந்த வருடத்தின்..." வெந்து தணிந்தது காடு.. உதயநிதி புகழாரம்.!!

தொடர்புடைய இணைப்புகள்

Suriya Tweet about Vendhu Thanindhathu Kaadu STR GVM AR Rahman

People looking for online information on Silambarasan TR, Suriya, Suriya tweet about VTK, Vendhu Thanindhathu Kaadu will find this news story useful.