www.garudabazaar.com

கமல் நடிக்கும் "இந்தியன்-2".. சென்னையின் மிக முக்கியமான இடத்தில் படப்பிடிப்பு? சூப்பர் தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Shankar Kamal Indian2 next schedule shooting at Chennai Airport

கடந்த 1996-ஆம் ஆண்டு ஷங்கா் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த   படம் இந்தியன். ஏ.‌எம். ரத்னம் தயாரிப்பில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் இந்தியன்.இந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்தில் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், மனோபாலா, குல்சன் குரோவர்,  அகிலேந்திர மிஷ்ரா, கல்யாணி ஆகியோர் நடிக்கின்றனர் .

Shankar Kamal Indian2 next schedule shooting at Chennai Airport

இப்படத்திற்கு  இசையமைப்பாளர் அனிருத்  இசையமைக்கிறார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார் இந்த படத்தின் எழுத்தாளர்களாக பணிபுரிகிறார்கள். முத்துராஜ் கலை இயக்குனராக பணிபுரிய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

கடந்த 2019 ஜனவரி மாதம் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி உள்ளது. இந்த படப்பிடிப்பில் நடிகை காஜல் அகர்வால் & கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளனர். இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு தற்போது  நடந்து வருகிறது.

சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் கமல்ஹாசன் தனது ரசிகர்களை சந்தித்த வீடியோக்கள் வெளியாகி இருந்தன. மேலும் கமலின் புதிய தோற்றம் குறித்த புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின்  அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷங்கர் இயக்கும் ராம் சரண் படத்தின் படப்பிடிப்பு நியுசிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் இருந்து ஷங்கர் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி சென்னை திரும்புவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Shankar Kamal Indian2 next schedule shooting at Chennai Airport

People looking for online information on Indian2, Kamal Haasan, Shankar will find this news story useful.