இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கும் புதிய படம் கருமேகங்கள் கலைகின்றன.
Also Read | "வேட்டையாடு விளையாடுல இந்த ஆக்ஷன் சீன் Direct பண்ணது இந்த இயக்குநரா??" - GVM
பாரதிராஜா, யோகிபாபு, கௌதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர், மம்தா மோகன்தாஸ் நடிக்கும் இப்படத்துக்கு பிரபல எடிட்டர் லெனின் இப்படத்துக்கு எடிட் செய்கிறார். ஜீ.வி பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
இப்படம் பற்றி பேசிய இயக்குனர் தங்கர் பச்சான், "அழகி'க்குப் பிறகு அனுபவ முதிர்ச்சியோடு நான் எடுத்திருத்திருக்கும் இந்த படம், என் படங்களில் இன்னொரு மைல் கல் இது
பல்வேறு மனிதர்களின் பலவிதமான மனங்கள். மனித உணர்வுகளின் உணர்ச்சித் ததும்பல்கள், சம்பவங்கள் நிறைந்து இருக்கும். உறவுகளின் சிக்கல்கள் குறித்தும் பேசுகிறது. என்னுடைய சிறுகதையை தழுவித்தான் எடுக்கிறேன். ஒவ்வொருத்தரும் கிடைத்த வாழ்க்கையை கடந்து வந்து விடுகிறோம். திரும்பிப் பார்த்து சரியாக இருந்திருக்கிறோமா.. இதை நமக்கு நாமே கேள்வி கேட்டுக்கிட்டால் எல்லோரும் மாட்டிக்குவோம். அழகிக்கு பிறகு இவ்வளவு அழுத்தமாக இப்படம் உருவாகிறது.
இப்படத்தின் தயாரிப்பாளர் வீரசக்தி தமிழ் பற்றுதல் உள்ள ஒரு சிறந்த தயாரிப்பாளர். எந்த நெருக்கடியும் தராமல் இந்த படத்தை எடுத்து வருகிறார். ஆதலால், என் உயிரையும் உணர்வையும் எரிபொருளாய் போட்டு படத்தை உருவாக்கி வருகிறேன்.
இந்த கதைக்கு பாரதிராஜா, யோகிபாபு, கௌதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர்னு அசலான நடிகர்களாக, இவர்களை விடவும் பாத்திர வடிவுக்கு யாரும் கிடையாது என்பது உறுதி படுத்தும்.
பாரதிராஜா அளவுக்கு யாரும் இதில் செய்ய ஆளில்லை. ஒவ்வொரு நாளும் 'தங்கர், உன் படத்தில் நடிக்கிறது எனக்கு பெருமைன்னு சொல்லுவார். தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிக் காட்டியவர்.
ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட் போட்டு வேலை பார்க்கும் யோகி பாபு இந்த கதையை சொன்னதும் 'வந்துடுறேன் ஐயா'னு சொன்னார். அதன்படியே வந்து நடித்துக் கொடுத்தார். அவரை நகைச்சுவை நடிகர்ன்னு மட்டும் சொல்லிட முடியாது.
கௌதம் மேனன், இதுவரை செய்யாத பாத்திரத்தேர்வை அத்தனை கச்சிதமாக நடித்தார்.
எஸ்.ஏ.சியின் அனுபவம் இதில் பேசுகிறது. மம்தா மோகன்தாஸ் தான் முக்கியமான 'கண்மணி'ங்கிற பொண்ணா வருது. நந்திதா தாஸ்க்கு பக்கத்தில் வர்ற கேரக்டர். இங்கேயிருந்து இணையத்தில் முகம் பார்த்து கதை சொன்னேன். அங்கேயிருந்து மம்தா கேரக்டரில் வாழ ஆரம்பித்து விட்டது. 'எப்ப ஷுட்டிங்?'னு கேட்டுட்டே இருக்கு.
நாஞ்சில் நாடன் கதையை எடுத்தேன்.
'கல்வெட்டு' கதையை 'அழகி'யாக்கினேன்.
'அம்மாவின் கைப்பேசி', 'ஒன்பது ரூபாய் நோட்டு'.
அப்படிதான்,
"கருமேகங்கள் ஏன் கலைந்து சென்றன" என்ற என் சிறு கதை, இப்போது "கருமேகங்கள் கலைகின்றன" வாக எடுத்துக் கொண்டிருக்கிறேன்." என்று தெரிவித்தார்.
Also Read | மாஸ்.. கௌதம் மேனன் இயக்கும் அடுத்த ஹீரோ இவர்தான்.!! Official அப்டேட்.!
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Gautham Menon Join Hands With Ram Pothineni Next Film
- Gautham Menon About Thalapathy Vijay Yohan Part One
- Bharathiraja Healthily Discharged Joins Next Thangar Bachchan Film
- Director Bharathiraja Son Manoj Bharathi Pressmeet Speech
- Director Bharathiraja In ICU Health Update Hospital Press Note
- Yogibabu Vidharth Movie Titled As Kudi Irundha Koil By Lyca Productions
- Bharathiraja Changed To Another Hospital For Treatment
- Radhika Prays For Bharathiraja In France Lourdes Church
- Director Bharathiraja Admitted In Hospital Health Update
- Thiruchitrambalam Dhanush Heartfelt Speech About Bharathiraja
- Suriya Faced Troubles And Gave Jai Bhim Says Bharathiraja
- He Taught Me Expressions Says Bharathiraja Suriya Laughed
தொடர்புடைய இணைப்புகள்
- 'ஹாஸ்பிட்டல்ல பில் கட்ட காசு இல்லையா..?'பாரதிராஜா இப்போ எப்படி இருக்காரு.?- மகன் மனோஜ் பேட்டி
- 🔴LIVE: Tamil Nadu State Movie Awards 2022 | தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா!
- "உண்மையில என்னோட உடல் நலம் இப்படி தான் இருக்கு"... மருத்துவமனையில் இருந்து Bharathiraja அறிக்கை
- "Wife வந்ததும் பேச்ச குறைச்சுட்டேன்மா" Yogi Babu & KPY Bala Nonstop கலாய்
- "DHANUSH, இனிமே என்னை எல்லாரும் தாய்கிழவினு கூப்பிட போறாங்க.." 😍 Nithya Menon | Thiruchitrambalam
- அன்னைக்கு RASHI KHANNA, இன்னைக்கு PRABHU DEVA 😍 DHANUSH Nice Gesture, PRABHU Sir, நம்ம Car-ல வாங்க
- Yogi Babu In Full Thug Mode!😎 Rocky Bhai To Sivaangi, யாரையும் விட்டு வைக்கல தல!🤣😅
- 🔴LIVE: YOGIBABU's PANNIKUTTY Celebrities Review | Aishwarya Rajesh, Karunakaran, Raj Mohan
- Pannikutty Movie Review | Yogi Babu, Karunakaran | Anucharan | Public Review
- "ஜனங்கள் ரசிச்சா எல்லாமே காமெடிதான்" - காமெடியா..? கதையா..?
- "கதையோடு சேர்ந்த காமெடி தான் WORKOUT ஆகும்!" நடிகர் மனோபாலா பேட்டி
- காமெடி நடிகர்கள் HERO - க்களான TREND SET..! - காமெடியா..? கதையா..?