www.garudabazaar.com

தி லெஜண்ட் படத்தில்.. விவேக் - மயில்சாமி காம்போ.. ஓடிடியில் பார்த்து கண்கலங்கும் ரசிகர்கள்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் 'தி லெஜண்ட்'. முன்னதாக நிறைய விளம்பரங்களில் தோன்றி மக்கள் மத்தியில் கவனம் பெற்றிருந்த லெஜண்ட் சரவணன், 'தி லெஜண்ட்' திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் களமிறங்கி இருந்தார்.

Vivek and MayilSamy in the legend movie fans emotional

Images are subject to © copyright to their respective owners

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28 அன்று வெளியான 'தி லெஜண்ட்', தமிழகமெங்கும் ஏராளமான திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. எமோஷன், ஆக்‌ஷன், காதல், காமெடி என கமர்சியல் மாஸ் படமாக பான் இந்தியா அளவில் 5 மொழிகளில் வெளியானது ’தி லெஜண்ட்’. இந்த படம் உலகம் முழுவதும் 45 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது.

லெஜண்ட் சரவணனின் தி லெஜண்ட்

இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி இயக்கிய இந்த படத்தில் விஜயகுமார், பிரபு, நாசர், சுமன், தம்பி ராமையா, ரோபோ சங்கர், மயில்சாமி, ஹரிஷ் பெரேடி, முனீஷ்காந்த், மன்சூர் அலிகான், ராகுல் தேவ், லிவிங்ஸ்டன், வம்சி கிருஷ்ணா, சிங்கம்புலி, லொள்ளு சபா மனோகர், அமுதவாணன், கே பி ஒய் யோகி, செல் முருகன், லதா, சச்சு, பூர்ணிமா பாக்யராஜ், கீத்திகா தேவதர்ஷினி, அய்ரா, தீபா ஷங்கர், மாஸ்டர் அஸ்வந்த் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

Images are subject to © copyright to their respective owners

தி லெஜண்ட் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை ஆர் வேல்ராஜ் மேற்கொள்ள, ரூபன் படத்தொகுப்பை கையாண்டார். கலை அமைப்பு பணிகளை எஸ் எஸ் மூர்த்தி கவனிக்க, பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதியுள்ளார், சண்டைக் காட்சிகளை அனல் அரசு வடிவமைத்துள்ளார், ராஜு சுந்தரம், பிருந்தா, தினேஷ் ஆகியோர் நடன பணிகளை மேற்கொண்டனர், வைரமுத்து, கபிலன், பா விஜய், சினேகன், கார்க்கி ஆகியோர் பாடல் வரிகளை எழுதியிருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் ஹிட் ஆகின.

தி லெஜண்ட் திரைப்படம் திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய சூழலில், அடுத்து ஓடிடி தளத்தில் எப்போது வெளியாகும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.

ஓடிடியில் லெஜண்ட் திரைப்படம்

அந்த வகையில், கடந்த (03.03.2023) டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி ஓடிடி ரிலீஸிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது லெஜண்ட் திரைப்படம். இந்த நிலையில், ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள லெஜண்ட் படத்தில் உள்ள கலங்க வைக்க விஷயம் ஒன்று சினிமா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners

விவேக் - மயில்சாமி

நடிகர் மயில்சாமி, கடந்த சிவராத்திரி தினத்தில் இரவு கோவிலில் இருந்து விட்டு அதிகாலை வீடு திரும்பி இருந்த சமயத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த விஷயம், ஒட்டு மொத்த திரை உலகினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் கடந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருந்தது. மயில்சாமிக்கு நெருங்கிய நண்பராக இருந்த நடிகர் விவேக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் உடல்நல குறைவால் காலமாகி இருந்தார்.

Images are subject to © copyright to their respective owners

சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ள மயில்சாமி மற்றும் விவேக் ஆகியோர் சினிமாவை தாண்டியும் நெருங்கிய நண்பர்கள் ஆவார். பல தருணங்களில் ஒன்றாக இருந்துள்ள விவேக் மற்றும் மயில்சாமி ஆகியோர் தற்போது உயிருடன் இல்லை என்பது பலரிடையே வருத்தமாகவும் உள்ளது.

அப்படி இருக்கையில், லெஜண்ட் படத்தில் விவேக் மற்றும் மயில்சாமி ஆகியோர் தோன்றி உள்ள காட்சிகள், அவரது ரசிகர்களை கண்கலங்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

Images are subject to © copyright to their respective owners

நடிகர் சரவணன் ஆராய்ச்சி செய்யும் லேபில் மயில்சாமி வேலை செய்கிறார். மறுபக்கம் லெஜண்ட் சரவணனுடன் வரும் விவேக், மயில்சாமியை லேபில் சந்தித்து அவரை கலைக்கவும் செய்கிறார். இருவர் தோன்றும் காட்சிகள், பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Vivek and MayilSamy in the legend movie fans emotional

People looking for online information on Mayilsamy, The legend, Vivek will find this news story useful.