“Interval -ல அழறத Troll பண்ணது வருத்தமா இருக்கு.. The Legend அவருக்கு முதல் படம்” — JD Jerry
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக அறிமுகமான 'தி லெஜண்ட்' திரைப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியானதற்கு பிறகு தற்போது ஓடிடியில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | விடுதலை : சண்டைக் காட்சி Shoot -ல் கை முறிந்ததா..? - ரசிகர்கள் மெச்சும் சூரியின் மெனக்கெடல்.!
கடந்த ஜூலை 28 அன்று வெளியான 'தி லெஜண்ட்', தமிழகமெங்கும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி இயக்கிய இந்த படத்தில் விஜயகுமார், பிரபு, நாசர், சுமன், தம்பி ராமையா, ரோபோ சங்கர், மயில்சாமி, ஹரிஷ் பெரேடி, முனீஷ்காந்த், மன்சூர் அலிகான், ராகுல் தேவ், லிவிங்ஸ்டன், வம்சி கிருஷ்ணா, சிங்கம்புலி, லொள்ளு சபா மனோகர், அமுதவாணன், கே பி ஒய் யோகி, செல் முருகன், லதா, சச்சு, பூர்ணிமா பாக்யராஜ், கீத்திகா தேவதர்ஷினி, அய்ரா, தீபா ஷங்கர், மாஸ்டர் அஸ்வந்த் உள்ளிட்ட பலர் நடித்தனர்.
Images are subject to © copyright to their respective owners.
தி லெஜண்ட் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை ஆர் வேல்ராஜ் மேற்கொள்ள, ரூபன் படத்தொகுப்பை கையாண்டார். கலை அமைப்பு பணிகளை எஸ் எஸ் மூர்த்தி கவனிக்க, பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதியுள்ளார், சண்டைக் காட்சிகளை அனல் அரசு வடிவமைத்துள்ளார், ராஜு சுந்தரம், பிருந்தா, தினேஷ் ஆகியோர் நடன பணிகளை மேற்கொண்டனர், வைரமுத்து, கபிலன், பா விஜய், சினேகன், கார்க்கி ஆகியோர் பாடல் வரிகளை எழுதியிருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் இசையமைக்கப்பெற்றன.
Images are subject to © copyright to their respective owners.
இதனிடையே லெஜண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை படத்தின் இயக்குனர்கள் ஜேடி & ஜெர்ரி பேட்டி அளித்துள்ளனர்.
இதில், “இந்த படம் மாஸ் கமர்ஷியல் படமாக இருந்தாலும் கூட சமூகத்தில் நிலவும் மிகப்பெரிய பிரச்சனையை எளிமையாக புரியக்கூடிய வசனக்களுடன் சரவணன் சார் பேசுவார். இந்த ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடக்கிறது. அதை தான் இந்த படத்தில் நாங்கள் பண்ணினோம். ஆனால் அதன் முக்கியத்துவம் கவனிக்கப்படவில்லை. விளம்பரத்தில் வெற்றிகரமாக சரவணன் சார் நடித்தார். ஆனால் இது நடிப்பு. ஹீரோவுக்கான மாஸ் எலிமெண்ட் உள்ளது. சினிமாவில் கமல் சார், ரஜினி சார், புனித் ராஜ்குமார் சார் என அனைவருடனும் பணிபுரிந்துள்ளோம்.
Images are subject to © copyright to their respective owners.
இன்று உள்ள மிகப்பெரிய நடிகைகள் தமன்னா, டாப்ஸி, சமந்தா என முன்னணி நடிகைகள் தங்கள் முதல் புராஜக்டாக எங்கள் விளம்பரத்தில் நடித்தனர். பலரிடம் இருந்து நாங்களும் கற்றுக்கொண்டோம். அந்த கற்றல் அனுபவத்தை வைத்து சரவணன் சாரை நன்றாக நடிக்க வைக்க முடியும் என நம்பினோம். சரவணன் சாரும் தன்னுடைய சிறந்த மெனக்கெடலை கொடுத்தார். மற்ற ஆர்டிஸ்ட்டின் நேரத்தை தன்னுடைய தாமதத்தால் வீணடிக்க கூடாது என்பதால் அதிகாலையிலேயே தயாராகிவிடுவார். அத்தனை பேருக்கு மத்தியில் வேகமாக கற்றுக்கொண்டு டான்ஸ், ஃபைட் எல்லாம் பண்ணினார்.
அவர் முதல் பட நடிகர் தானே? நேற்றுவரை கடையில் வியாபாரம் தானே பண்ணிக்கொண்டு இருந்தார். அவரிடம் போய் சிவாஜி மாதிரி நடிப்பதாக ட்ரோல் பண்ணுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு உடல்மொழி உள்ளது. தம்பி ராமையா கதறி அழுவார். அப்படிதான் சரவணன் சார் ஷட்டிலாக நடிப்பதை தன்னுடைய உடல்மொழியாக கொண்டிருப்பார்.
இவருடைய கேரக்டர் டிசைனையே அதிக உணர்வுகளை வெளிக்கொண்டு வராத ஹிப் மேன் என்கிற ஒரு பட கேரக்டரை கொண்டு உருவாக்கினோம். முதல் படத்திலேயே இப்படி நடித்துள்ளாரே? அதை ஏன் பார்ப்பதில்லை யாரும். பலரும் இந்த படத்தை தற்போது ஓடிடியில் பார்த்துவிட்டு, இந்த படம் நல்லாருக்கே, ஏன் தியேட்டரில் விமர்சிக்கப்பட்டது என மதிப்பீடு தருகிறார்கள். அனைவரும் அப்ரிசியேட் பண்ணுகிறர்கள். லெஜண்ட் சார் தவிர்க்க முடியாத நடிகர், இன்னும் பல படங்களை அவர் பண்ணுவார். இந்த படம் தியேட்டர் அனுபவத்துக்கான திரைப்படமாகவே நாங்கள் உருவாக்கினோம்” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் பேசியவர்கள், “இடைவேளை காட்சியில் அவருடைய அழுகை தேவையில்லாமல் கிண்டல் செய்யப்பட்டது. அவர் ஒன்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இல்லை. இது அவருடைய முதல் படம், இப்படிதான் அழுக வேண்டும் என ஏன் முடிவு செய்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் உடல்மொழி தனித்துவமானது. அதுதான் வருத்தம். உலகப்படங்களை எல்லாம் பார்த்தவர்கள் கூட தேவையில்லாமல் விமர்சனம் செய்தார்கள். அதெல்லாம் வருத்தமானதாக இருந்தது.” என தெரிவித்துள்ளனர்.
Also Read | Viduthalai : “கோவத்துல கன்னா பின்னானு கத்துவேன்.. என்னுடைய இயலாமை.!” மன்னிப்பு கேட்ட வெற்றிமாறன்.!
“INTERVAL -ல அழறத TROLL பண்ணது வருத்தமா இருக்கு.. THE LEGEND அவருக்கு முதல் படம்” — JD JERRY வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Vivekh Popular Recreation Comedy In The Legend Movie
- Directors JD And Jerry About Actress Nayanthara In The Legend
- The Legend Movie Late Actor Vivek Message Scenes
- Vivek And MayilSamy In The Legend Movie Fans Emotional
- The Legend Movie To Stream In Disney + Hotstar Ott Official
- The Legend Saravanan Diwali Wishesh New Viral Pic
- Poeple In Actor The Legend House Vijayadasami Trending
- The Legend Saravanan Stylish Picture Viral Tweet Trending
- The Legend Movie Worldwide Box Office Collection Official
- Why Didnt Saravanan Direct The Legend Movie Here Is His Answer
- 4 TN Districts Leave Due To Chess Olympiad In The Legend Release
- Common Man Becomes The Legend Oneline Saravanan Video
தொடர்புடைய இணைப்புகள்
- "Achu மா, நான் வீட்டுக்கு வரல" 😳 Legend Saravana-ல் அடம்புடிச்ச Zaara 🥳 Shopping-ல் நடந்த Twist 😱
- "Achu மா, அந்த Lorry-அ கூப்பிடு" 🥳 Legend Saravana New Year Offer-ல வேட்டையாடிய Archana, Zaara 🔥
- പാത്രക്കച്ചവടത്തിൽ തുടങ്ങി കോടികൾ മുടക്കിയ സിനിമയിലെ നടനായ Legend ശരവണന്റെ കഥ
- 'அன்று Bill Gates, Elon.. இன்று Legend சரவணன்'.. உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த அந்த சுவாரஸ்யம்!
- പൈസ വാരികൂട്ടാം എന്ന വിശ്വാസം ഉണ്ടോ Listin-ന് |
- "அப்படி ஒரு Romance.. நாடி நரம்புலாம் துடிக்குது" உணர்ச்சி பொங்கிய வெறித்தனமான ரசிகர் | The Legend
- Listin-ന് പണം വാരിക്കൂട്ടാമെന്ന വിശ്വാസമുണ്ടോ? | ചൂടൻ മറുപടിയുമായി Listin
- "என்னது நான் CM-ஆ.." பதறிய LEGEND SARAVANAN 🤣
- "என்னையும் மீறி என்கிட்ட Rajini Style கொஞ்சம் Reflect ஆகிருக்கு" Legend Mass Speech | The Legend
- Pan World Hero-வா உருவெடுத்த Legend Saravanan 😎 கடல் கடந்து 'கொடி பறக்குதா' 🔥
- "LEGEND சார் தான் என்னோட ROLE MODEL..!" MEDIA 95 பழனி ராஜா Open Talk
- 🔴LEGEND Audio & Trailer Launch Video 🔥 Legend Saravanan, Harris Jayaraj, JD - Jerry