'வீட்டில்' இருந்தே செய்து 'உங்கள்' அனுபவத்தை பகிருங்கள்... நடிகை வேண்டுகோள்!
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனா பரவலை தடுக்க அரசு அறிவித்த இந்த 21 நாள் ஊரடங்கு உத்தரவிற்கு கட்டுப்பட்டு அனைத்து நடிகர்,நடிகைகளும் தங்கள் வீட்டிலேயே உடற்பயிற்சி, சமையல், புத்தகம் படிப்பது போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தொகுப்பாளினியும், நடிகையுமான ரம்யா வீட்டிலிருந்தே உடற்பயிற்சியை எப்படி எளிய முறையில் செய்யலாம் என்பதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டா பதிவில்“வீட்டிலிருந்து உடற்பயிற்சி செய்ய விரும்பும் 89% பேருக்கு இந்த வீடியோவை இணைத்துள்ளேன். எனது வீடியோவை பார்த்து கார்டியோ சர்க்யூட் ஒர்க் அவுட்டை வீட்டிலிருந்தே செய்து உங்கள் அனுபவத்தை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
Tags : Ramya Subramanian, Corona