''வந்தேறிகளை விரட்ட வேண்டும்..'' - மூடர்கூடம் நவீன் ஏன் இப்படி சொல்கிறார்.?
முகப்பு > சினிமா செய்திகள்இயக்குநர் நவீன் கொரோனா வைரஸ் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
மூடர்கூடம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நவீன். சென்ட்ராயன், ஓவியா உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து இவர் அலாவுதினின் அற்புத கேமரா என்கிற படத்தை இயக்கியுள்ளார். மேலும் அருண் விஜய், விஜய் ஆண்டனி நடிப்பில் அக்னி சிறகுகள் என்கிற படத்தையும் இயக்கி வருகிறார்.
இந்நிலையில் இவர் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த தனது பதிவில், 'விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தியிருக்க வேண்டிய வந்தேரி வைரஸ் இன்று பஸ் ஏறி ஊர் ஊராக சென்று கொண்டிருக்கிறது. வந்தேரிகளை விரட்ட வேண்டும் எனும் கொள்கையை இந்த ஒரு விடயத்தில் மட்டும் ஏற்க்கிறேன். நாம் வெளியே வராமல் வீட்டிற்குள்ளிருந்து நடத்தும் போர் இது' என தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தியிருக்க வேண்டிய வந்தேரி வைரஸ் இன்று பஸ் ஏறி ஊர் ஊராக சென்று கொண்டிருக்கிறது. வந்தேரிகளை விரட்ட வேண்டும் எனும் கொள்கையை இந்த ஒரு விடயத்தில் மட்டும் ஏற்க்கிறேன். நாம் வெளியே வராமல் வீட்டிற்குள்ளிருந்து நடத்தும் போர் இது#StayHome
— Naveen Mohamedali (@NaveenFilmmaker) March 26, 2020