www.garudabazaar.com
iTechUS

"இந்த ஃபோட்டோவே சொல்லுது!" - ரசிகரின் Post-க்கு VJ மகேஸ்வரியின் வைரல் கமெண்ட்..! bigg boss 6

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கிராண்ட் ஃபினாலே நடந்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

VJ Maheswari on Kamal standing with vikraman bigg boss finale

Also Read | பீரியட் காமெடி-ட்ராமாவா ? சந்தானம் நடிக்கும்‘வடக்குப்பட்டி ராமசாமி’ - ஒன்லைன் இதுதான்..!

இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கினர். அதன்படி இந்நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டா ராஜேஷ், சாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, (வைல்டு கார்டு எண்ட்ரியில்) மைனா உள்ளிட்ட நபர்கள் பங்கேற்றனர்.

VJ Maheswari on Kamal standing with vikraman bigg boss finale

இந்நிலையில் நடந்து முடிந்த கிராண்ட் ஃபினாலேவில் விக்ரமன் & அசிம் இருவரில் அசிமின் வெற்றியை அறிவிப்பதற்கு முன்பாக, கையை மாற்றி மாற்றி ஆட்டி விளையாட்டு காட்டிய கமல் இறுதியாக அசிம் வெற்றி பெறுவதாக அறிவித்தார்.  வெற்றி பெற்ற அசிம் கோப்பையை உயர்த்திக்காட்டி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அத்துடன், அவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுக்கான காசோலையும், இந்தியாவில் அறிமுகமாகும் மாருதி சுசுகி காரின் பிரஸ்ஸா எனும் மாடலின் முதல் காரும் பரிசாக வழங்கப்பட்டது.

VJ Maheswari on Kamal standing with vikraman bigg boss finale

இந்த நிகழ்ச்சியில் விக்ரமன் ரசிகர்கள் பலரும் விக்ரமன்தான் ஜெயிப்பார் என எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் விக்ரமன் 2-ஆம் இடம் பிடிக்க,  அசிம் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலைமையிலதான் அசிமின் வெற்றி குறித்த கலவையான கருத்துக்கள் இணையத்தில் எழுந்து வருகின்றன. குறிப்பாக ரசிகர் ஒருவர், டைட்டில் வின்னராக அசிமை கமல் அறிவித்த பிறகான ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்துள்ளார்.

VJ Maheswari on Kamal standing with vikraman bigg boss finale

ஸ்கிரீன் ஷாட்படி, அசிம் கோப்பையை உயர்த்தி வெற்றித் தருணத்தை அனுபவிக்கும்போது, தனியாக நின்ற ரன்னர் விக்ரமனுக்கு அருகில் கமல் சென்று நின்றுகொண்டார். கமல் சாரும் இம்முடிவின்போது கனத்த இதயத்துடனே இருந்திருப்பார் என அந்த ரசிகர் கமெண்ட் போட்டிருக்கிறார். இதை பகிர்ந்த பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர் விஜே மகேஸ்வரி, “உண்மை” என குறிப்பிட்டுள்ளார்.

Also Read | ஒரே நாளில் உயிரிழந்த 3 திரைக்கலைஞர்கள்.! சோகத்தில் தமிழ் திரையுலகம்..

தொடர்புடைய இணைப்புகள்

VJ Maheswari on Kamal standing with vikraman bigg boss finale

People looking for online information on Azeem winner, Bigg boss 6 tami, Bigg boss 6 title winner, Bigg boss tamil winner, Vikraman, Vj maheswari will find this news story useful.