www.garudabazaar.com

Dhamma Thundu : ராஜா ராணி அர்ச்சனாவா இது..? தெறிக்க விடுறாங்களே!! ட்ரெண்ட் ஆகும் 1 நிமிட ஆல்பம் Song!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இன்ஸ்டாகிராமின் புதிய ட்ரெண்ட்டாக 1 மினிட் மியூசிக் இருந்துவருகிறது. அதன்படி '#1MinMusic' என்கிற ஹேஷ்டேகில் ரீல்ஸ் வடிவத்துடன் இசை வீடியோக்களை வெளியிட படைப்பாளிகள் மற்றும் கலைஞர்களுடன் இந்த ஃபோரம் இணைந்துள்ளது.

VJ Archana Rathankumar 1 min music Dhamma Thundu

ரீல்ஸ் மற்றும் ஸ்டோரிகளில் பயன்படுத்துவதற்கு இன்ஸ்டாகிராம் பிரத்தியேகமாக அதன் பிளாட்ஃபார்மில் கிடைக்கும் மியூசிக் டிராக்குகள் மற்றும் வீடியோக்களின் தொகுப்பே இந்த  ‘#1MinMusic’, இதில் இந்தியா முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தனது ஒரு நிமிட பாடல்களைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டுவருகிறார்கள். அந்த வகையில் ரதன்குமார் & விஜே அர்ச்சனா நடித்துள்ள ‘தம்மா துண்டு’ என்கிற ஆல்பம் பாடலும் வெளியாகியுள்ளது.

VJ Archana Rathankumar 1 min music Dhamma Thundu

விஜய் டிவி ராஜா ராணி சீரியலில் அர்ச்சனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் விஜே அர்ச்சனா.‌ ராஜா ராணி சீரியலின் குறிப்பிட்ட அந்த குடும்பத்தின் மருமகளாக நடித்த அர்ச்சனா, தனக்கே உரிய முக பாவனைகள், உடல் மொழி மற்றும் தனித்துவமான வசன உச்சரிப்பால் பல ரசிகர்களை சம்பாதித்தார். பன்முகத் திறமைகள் கொண்ட அர்ச்சனா பின்னர் இந்த சீரியலில் இருந்து விலக அவரை பலரும் மிஸ் பண்ணினர். இந்த நிலையில் தற்போது புத்தம் புதிய ஃபார்மில் மீண்டும் இந்த ஆல்பம் தோன்றியிருக்கிறார்.

சீரியலில் பாரம்பரிய உடை அணிந்து நடித்துக் கொண்டிருந்த அர்ச்சனா, தற்போது வெளியாகி இருக்கும் இந்த புதிய ஒரு நிமிட ஆல்பம் பாடலில் மாடன் டிரஸ்ஸில் கலக்கலாக டான்ஸ் ஆடி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். அதன்படி, தம்மா துண்டு என்கிற தலைப்பில் உருவாகி இருக்கும் இந்த ஆல்பம் பாடலை ரதன் குமார் இசையமைத்து அர்ச்சனாவுடன் இணைந்து நடித்திருக்கிறார். ஜெகதீஷ் பழனிசாமி தயாரித்துள்ள இந்த பாடல் சோனி மியூசிக்கில் வெளியாகியிருக்கிறது.

தொடர்புடைய இணைப்புகள்

VJ Archana Rathankumar 1 min music Dhamma Thundu

People looking for online information on 1 min music, 1minmusic, Album Song, Dhamathundu, Music, VJ Archana will find this news story useful.