www.garudabazaar.com

Varisu : இன்னிக்குதான் தீபாவளி.. தளபதி விஜய்யுடன் வாரிசு இசையமைப்பாளர் தமன் .. வைரல் Post.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் 'பீஸ்ட்' திரைப்படம் கடைசியாக வெளியாகி இருந்தது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

vijay Varisu first single ranjithame music director thaman post

இதனைத் தொடர்ந்து, வம்சி பைடிப்பல்லி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இப்படத்திற்கு, ஹரி, ஆஷிஷோர் சாலமன் மற்றும் விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ்.தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

இப்படட்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா ஆகியோருடன் பிரகாஷ்ராஜ், சரத் குமார், பிரபு, குஷ்பு, யோகிபாபு, ஷ்யாம் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். 2023 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக இந்த திரைப்படம் வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடலான் "ரஞ்சிதமே" பாடலின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நடிகர் விஜய் இந்த பாடலை பாடி உள்ள நிலையில், நவம்பர் 5 ஆம் தேதியன்று பாடல் வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டது. இது தவிர, ரஞ்சிதமே ப்ரோமோ வீடியோவில் நடிகர் விஜய்யின் சில நடன அசைவுகளும் இடம்பெற்றுள்ளது. இதற்கு மத்தியில் ஐந்தே நிமிடத்தில் யூடியூப் தளத்தில் வாரிசு படத்தின் முதல் சிங்கிளான ரஞ்சிதமே பாடலின் ப்ரோமோ செய்துள்ள சாதனையை ரசிகர்கள் கொண்டாடியும் வருகின்றனர்.

ஆம், இந்தியாவிலேயே 1 லட்சம் லைக்குகளை ஐந்தே நிமிடத்தில் குவித்த சாதனையை வாரிசு படத்தின் ப்ரோமோ படைத்துள்ளது . இதற்கு முன்பும் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலின் ப்ரோமோ வீடியோ, 9 நிமிடங்களில் 1 லட்சம் லைக்குகளை பெற்று சாதனை படைத்தது. அதனை விஜய் படத்தின் ப்ரோமோவே தற்போது முறியடித்துள்ளது. இந்நிலையில் தான் இப்படத்தின் இசையமைப்பாளர் எஸ்.தமன் நடிகர் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட ஃபோட்டோவை பகிர்ந்து, ‘இன்றுதான் எனக்கு தீபாவளி.. பட்டாசு பாடலுடன் உங்களுடன் கொண்டாட காத்திருக்கிறேன்’ என பகிர்ந்துள்ளார்.

தமிழில் ஒஸ்தி, காஞ்சனா என பல படங்களுக்கு இசையமைத்த தமன், பாய்ஸ் திரைப்படத்தில் 5 பாய்ஸில் ஒருவராக நடித்திருப்பார். தெலுங்கிலும் முன்னணி இசையமைப்பாளராக விளங்கி வரும் எஸ்.தமன், தற்போது வாரிசு திரைப்படத்துக்கு இசையமைத்திருப்பது விஜய் மற்றும் தமன் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய இணைப்புகள்

vijay Varisu first single ranjithame music director thaman post

People looking for online information on Ranjithame, S Thaman, Sri Venkateshwara Creations, Varisu, Varisu first single, Vijay will find this news story useful.