விஜயின் "தளபதி64" படத்தில் இணைந்த முன்னணி நடிகை!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Oct 29, 2019 10:36 AM
ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் சுமார் ரூ.180 கோடி பட்ஜெட்டில் அட்லி இயக்கியுள்ள திரைப்படம் ‘பிகில்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து தளபதி64 படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய்யோடு விஜய் சேதுபதி, சாந்தனு மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் அடுத்து டெல்லியில் துவங்கவுள்ள நிலையில் தற்போது நடிகை ஆண்ட்ரியா ஒரு முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்று தகவல் வந்துள்ளது.