பிரபல பாலிவுட் ஹிட் படத்தின் ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண் !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்துக்கு பிறகு ஹரிஷ் கல்யாண் தற்போது 'தனுசு ராசி நேயர்களே' என்கிற படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை 'மகாநதி', 'குணா' படங்களின் இயக்குநர் சந்தான பாரதியின் மகன்  சஞ்சய் பாரதி இயக்கிவருகிறார்.

Harish Kalyan to act Hindi Remake of Vicky Donor

இந்த படத்தில் ரெபா மோனிகா, முனீஷ் காந்த், பாண்டியராஜன் ஆகியோர் முக்கியவேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பாக ஏ.எம்.கோபாலன் தயாரித்துவருகிறார். இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கறார்.

இந்நிலையில் அடுத்து ஹரீஷ் கல்யாண் நடிக்கும் படம் பற்றி தகவல் கிடைத்துள்ளது. எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹரிஷ் கல்யாண், ஹிந்தி ரீமேக் படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறாராம்.  ஆயுஷ்மான் குரானா,  யாமி கௌதம் ஆகியோர் நடித்திருக்கும் 'விக்கி டோனர்' தான் அது.

விந்தணு கொடை வழங்குதல் அவசியத்தை கூறும் இந்த படத்தில் ஹிந்தியில் இடம் பெற்றிருப்பது போன்ற அடல் கண்டன்ட் இதில் இருக்காது என கூறப்படுகிறது. இந்த படத்தை விஷாலின் 'அயோக்யா' படத்தை வெளியிட்ட ஸ்கீரன் சீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறார்களாம்.