” Wife பேச்ச கேட்டு…” பிக் பாஸ் பிரபலம் போட்ட வீடியோவுக்கு மாஸ்டர் ஸ்டார் கமெண்ட்!
முகப்பு > சினிமா செய்திகள்அஜித் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கிய மங்காத்தா படம் மூலம் பிரபலம் அடைந்தவர் மஹத். தொடர்ந்து பிரியாணி, வந்தா ராஜாவா தான் வருவேன், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

மாடல் அழகி பிராச்சி மிஸ்ராவை இவர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். உடற்பயிற்சி, நடிப்பு என்று பலதரப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி வரும் மஹத் இன்ஸ்டாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். சமீபத்தில் அவர் பதிவிட்ட சிம்புவுடனான வீடியோ சேட்டிங் ஸ்க்ரீன் ஷாட் வைரலானது.
இந்நிலையில் மஹத் இன்னொரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார். இணையத்தில் ட்ரெண்டாகி வரும் Fit the Switch சேலஞ்ச் வீடியோ தான் அது. இரண்டு பேர் கண்ணாடி முன் நின்று வீடியோ எடுத்துக் கொள்ள வேண்டும்.
சில வினாடிகளில் இருவரும் ஒருவர் உடையை மற்றவர் மாட்டிக்கொண்டு மீண்டும் அந்த வீடியோவில் தோன்ற வேண்டும். மஹத்தும் அவர் மனைவியும் இப்படி ஒரு வீடியோவை பதிவேற்றினர். இதற்கு கமெண்ட் செய்த சாந்தனு, ஆண் பெண் உடையை அணிய வேண்டும் என்பது தானே சேலஞ்ச், நீங்கள் ஆண் உடையில் இருக்கிறீர்கள் என கேட்க பிராச்சி குறுக்கே வந்து ஒரு அசால்டான பதில் சொல்லி தன் கணவனை மீட்டார்.