சிபிராஜின் 'கபடதாரி' படத்தில் இணைந்த விஸ்வரூபம் ஸ்டார்!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Oct 31, 2019 10:30 AM
கிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சிபிராஜின் 'கபடதாரி' படத்தில் 'விஸ்வரூபம்' படத்தில் கமல்ஹாசனின் ஜோடியாக நடித்த பூஜா குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பிரதீப் கிருஷ்ண மூர்த்தி இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடித்து வெளியான படம் 'சத்யா'. இந்தத படத்தை நாதாம்பாள் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக சத்யராஜ் தயாரித்திருந்தார். சைமன் கே. கிங் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இதனையடுத்து பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடித்து வரும் படம் கபடதாரி. இந்த படத்தை கிரியேட்டிவ் எண்டர்டெயினெர்ஸ் மற்றும் டிஸ்டிபூயூட்டர்ஸ் சார்பாக தனஞ்செயன் தயாரிக்கிறார்.
இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா, நாசர், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படம் கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற கவலுதாரி படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது.
இந்த படத்துக்கு சைமன் கே.கிங் இசையமைக்க, ரசமதி ஒளிப்பதிவு செய்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். இந்த படத்துக்கு இயக்குநர் ஜான் மகேந்திரன் மற்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் இணைந்து திரைக்கதை மற்றும் வசனங்கள் எழுதியுள்ளனர்.