சிபிராஜ் நடிக்கும் திரில்லர் படத்தில் இணைந்த பிரபல நடிகை!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 23, 2019 11:39 AM
இயக்குனர் பிரதீப்-சிபிராஜ் கூட்டணியுடன் புதிதாக இணைந்திருக்கிறார் நந்திதா ஸ்வேதா

இத்திரைப்படத்தில் நந்திரா ஸ்வேதா ஒரு பத்திரிகையாளராக நடிக்கவிருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் எந்தவொரு காதல் கட்சிகள் இருக்காது என்றாலும், அவரது கதாபாத்திரம் திரைப்படத்தில் ஒரு முக்கியமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
க்ஷணம் என்கிற தெலுங்கு திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு அந்த திரைப்படத்தை தமிழில் சத்யா என்ற பெயரில் ரீமேக் செய்தனர். இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த திரைப்படத்தை சைத்தான் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கினார். இந்த திரைப்படத்தில் நடிகர்கள் சிபிராஜ், ஆனந்தராஜ், சதிஷ், நடிகைகள் ரம்யா நம்பீசன், வரலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்
அந்த திரைப்படத்திற்க பிறகு, தற்போது புதிய த்ரில்லர் படத்திற்காக மீண்டும் அதே இயக்குனருடன் கைகோர்த்துள்ளார் சிபிராஜ். இந்த திரைப்படத்தை ஜி.தனஞ்சயன் தயாரிக்கிறார்.
இந்த திரைப்படம் இயக்குனர் ஹேமந்த் ராவ் இயக்கிய கன்னட சூப்பர் ஹிட் த்ரில்லர் திரைபடமான காவலூடாரி. இந்த திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக தமிழில் ரீமேக் செய்கின்றனர்.
மேலும், இப்படத்தில் நடிக்கும் நடிகைகள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா ஒரு பத்திரிகையாளராக நடிக்கிறார். அவருக்கு இப்படத்தில் எந்தவொரு காதல் கட்சிகளை இருக்காது என்றாலும், அவரது கதாபாத்திரம் திரைப்படத்தில் ஒரு முக்கியமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. நந்திதா ஸ்வேதா கடைசியாக தேவி 2 மற்றும் தமிழ், தெலுங்கு இருமொழி திரைப்படமான செவனில் நடித்தார்.