சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ ரிலீஸ் குறித்த விவரம் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 31, 2019 10:17 AM
‘என்.ஜி.கே’, ‘காப்பான்’ திரைப்படங்களை தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

சமீபத்தில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த ‘காப்பான்’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது ‘இறுதிச்சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகளை நடிகர் சூர்யா முடித்துள்ளார்.
இப்படத்தை ஆஸ்கர் விருது வென்ற தயாரிப்பாளர் குனீத் மோங்காவுடன் இணைந்து நடிகர் சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பேனரில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ‘சர்வம் தாள மயம்’ படத்தில் நடித்த அபர்ணா முரளி நடித்துள்ளார். மேலும், கருணாஸ், ஊர்வசி, ஜாக்கி ஷ்ரோஃப் ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு நடித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் நவ.11ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்நிலையில், வரும் டிசம்பர்.20ம் தேதி ரிலீசாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே தேதியில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹீரோ’ திரைப்படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.