விஷ்ணு விஷால் உருக்கமான கடிதம் - ''என் மனைவிய பிரிஞ்சுட்டேன், என் மகன் என்கிட்ட இல்ல''
முகப்பு > சினிமா செய்திகள்விஷ்ணு விஷால் தற்போது எஃப்ஐஆர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தை மனு ஆனந்த் இயக்க, இயக்குநர் கௌதம் மேனன், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், கௌரவ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் விஷ்ணு விஷால் ரசிகர்களுக்காக ஸ்பெஷலான கடிதம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக வெளியிட்டுள்ளார். அதில், ''கடந்த 2017ல் நானும் என்னுடைய மனைவியும் பிரிந்து விட்டோம். என் மகன் என்னைவிட்டு விலகி போய்விட்டான்.
நான் உடஞ்சுட்டேன். வாழ்க்கை இவ்ளோ மோசமாக போகும் என்று நினைக்கவில்லை. குடித்தேன். தூக்கமின்மையும், மன அழுத்தமும் என்னை நோயாளியாக்கியது. சிறிய சர்ஜெரி நடைபெற்றது.
மேலும் அது என் தொழிலும் பாதித்தது. என் படங்கள் தவறான நேரங்களில் ரிலீஸ் ஆனது. எனது தயாரிப்பு நிறுவனம் இழப்புகளை சந்தித்தது. இதில் இருந்து மீண்டு வர முடிவு செய்து சில சிகிச்சைகள் எடுத்துக்கொண்டேன். உடற்பயிற்சி செய்தேன். யோகா செய்தேன். எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களிடம் இருந்து தள்ளியிருந்தேன்.
அறுவை சிகிச்சை செய்ததனால் உடற்பயிற்சிக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டும் நான் செய்தேன். 6 மாதங்களில் 16 கிலோ எடையைக் குறைத்தேன். உடல் வலிமை உங்களின் மன வலிமையை அதிகரிக்கும். கடவுள் உங்களுக்கு நல்ல உடல் மற்றும் மன வலிமையை அளிக்கட்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
I took the VAARANAM AAYIRAM way 💪
P.S - Sorry for the long letter but i had to put my heart out to all my lovely fans and friends :) 🤗😘
#motivation #lifelessons #thewayback #train #painandgain #facingchallenges pic.twitter.com/jKWHzahoHR
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) January 16, 2020