விஷ்ணு விஷால் இந்த ஸ்டாருடன் ரொமான்டிக் ஃபோட்டோஸ் வைரல் !
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 03, 2020 04:15 PM
நடிகர் விஷ்ணு விஷால் தற்போது மனு ஆனந்த் இயக்கும் 'எஃப்ஐஆர்' படத்தில் நடித்து வருகிறார். மனு ஆனந்த் இயக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து விஷ்ணு விஷால், 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' பட இயக்குநர் செல்ல அய்யாவு இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அவர் தனது விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பாக தயாரிக்கிறார்.
இந்நிலையில் பேட்மிண்டன் வீராங்கணை ஜ்வாலா உடன் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ஜுவாலா தனது சமூக வலைதளப்பக்கத்தில் விஷ்ணு விஷாலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். அந்த பதிவில், மை பேபி, எங்கள் சார்பில் புத்தாண்டு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
Tags : Vishnu Vishal, Jwala Gutta