‘ராட்சசன்’ ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் சென்சேஷனல் பாலிவுட் நடிகர்!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Dec 05, 2019 11:00 AM
நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அமலா பால் ஜோடி சேர்ந்து நடித்த கோலிவுட்டின் சூப்பர் ஹிட் சைக்கோ த்ரில்லர் படமான ‘ராட்சசன்’ திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளது.

இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில் விறுவிறுப்பான சைக்கோ த்ரில்லர் படமான ‘ராட்சசன்’ படத்தில் அமலா பால், சரவணன், காளி வெங்கட், அம்மு அபிராமி, ராம்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் வெளியான ‘ராட்சசன்’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமத்தை அந்நிறுவனத்திடம் இருந்து நடிகர் விஷ்ணு விஷால் கைப்பற்றியிருந்தார். இந்நிலையில், இப்படத்தில் நடிக்கும் ஹீரோ குறித்த தகவல் தற்போது நமக்கு கிடைத்துள்ளது.
‘ராட்சசன்’ படத்தில் விஷ்ணு விஷால் நடித்த அருண் குமார் என்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் சென்சேஷன் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் தமிழில் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்ற நிலையில், இதன் ஹிந்தி ரீமேக்கில் ஆயுஷ்மான் குர்ரானா நடிக்கவிருப்பது கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.