4 மொழிகளில் இன்று வெளியானது விஷால் நடிக்கும் சக்ரா படத்தின் அசத்தலான ட்ரெய்லர்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஷால் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கு படம் சக்ரா. இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது.

Vishals chakra movie trailer released today in 4 languages

விஷால் ஃபிலிம் ஃபாக்டரி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கஸாண்ட்ரா,  ஸ்ருஷ்டி டாங்கே, கே.ஆர். விஜயா, மனோபாலா, ரோபோ ஷங்கர், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் சக்ரா படத்தின் ட்ரெய்லரை  விஷால் தனது ட்விட்டரில் இன்று வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு,மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் ட்ரெய்லர் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் வியாபார மோசடிகளைப் மையமாகக் கொண்டும், சைபர் ஹாக்கிங் சம்பவங்களை வைத்து துணிகர கொள்ளை நிகழ்த்தும் நிழல் மனிதனைப் பற்றிய கதைதான் சக்ரா.

 

இவ்வகையில் மிரட்டலான டெக்னாலஜி த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் சக்ரா படத்தின் இந்த ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ட்ரைலர் வெளியாகி ஒருசில மணி நேரத்திலேயே 2,32,000 பார்வையாளர்களை அடைந்தது. விஷால் - யுவன் கூட்டணிக்கு ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்களின் வரவேற்பு கிடைத்து வருவதால், சக்ரா திரைப்படமும் மேலும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

Vishals chakra movie trailer released today in 4 languages

People looking for online information on Chakra, Regina, Shradda srinath, Trailer, Vishal will find this news story useful.