'ஜி.வி.பிரகாஷ் - சைந்தவியின் லேட்டஸ்ட் போட்டோ வைரல்.!' - ''Pregnent-ஆன பிறகு ஜி.வியை ரொம்ப புடிக்குதாம்.!"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாடகி சைந்தவி தனது கணவருடன் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

ஜி.வி.பிரகாஷ் மீது உள்ள காதல்.. மனைவி வெளியிட்ட போட்டோ வைரல் | singer saindhavi shares her maternity photo with gv prakash on their wedding anniversary

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் கலக்கி வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவர் தற்போது வசந்தபாலன் இயக்கியுள்ள ஜெயில் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் அண்மையில் அசுரன் ஆல்பம் மற்றும் பின்னணி இசையில் சூப்பர் ஹிட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ் அடுத்த சூரரைப் போற்று திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவருக்கும் இவரது மனைவியான பாடகி சைந்தவிக்கும் அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. 

இந்நிலையில் பாடகி சைந்தவி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது கணவர் ஜி.வி.பிரகாஷுடன் லேட்டஸ்ட்டாக எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், ''என இனிய கணவருக்கு 7-வது திருமண நாள் வாழ்த்துக்கள். ஒவ்வொரு வருடமும் உங்கள் மீது உள்ள காதல் வளர்ந்து கொண்டே போகிறது. நான் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில், நீங்கள் என் மீது மிகுந்த அக்கறை காட்டுகிறீர்கள். நம் குழந்தையின் மீது அன்புள்ள அப்பாவாக நீங்கள் நடந்து கொள்வதை பார்க்கும் பொழுது, இன்னும் என் காதல் அதிகரிக்கிறது. நீங்களும், இந்த சிறிய இளவரசியும் என் வாழ்வில் நடந்த மிகச்சிறந்த விஷயங்கள்'' என சந்தோஷமாக பதிவிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை கமன்ட்ஸாக அடித்து வருகின்றனர். 

 

ஜி.வி.பிரகாஷ் மீது உள்ள காதல்.. மனைவி வெளியிட்ட போட்டோ வைரல் | singer saindhavi shares her maternity photo with gv prakash on their wedding anniversary

People looking for online information on GV Prakash Kumar, Saindhavi Praksh will find this news story useful.