சாத்தான்குளம் ஜெயராஜ் - ஃபெனிக்ஸ் மரணம்.. மனித உரிமை ஆணையத்தில் இளம் நடிகை புகார்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை சாத்தான்குளத்தில் நடந்த சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். 

சாத்தான்குளம் சம்பவம் - மனித உரிமை ஆணையத்தில் புகாரளித்த நடிகை | actress sanam shetty files in human rights commission on sathankulam jeyaraj

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக கலக்கி வருபவர் ஷனம் ஷெட்டி. இவர் தமிழில் அம்புலி படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து இவர் கதம் கதம், சவாரி, சிபிராஜ் நடித்த வால்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் ஹன்சிகா, சிம்பு நடித்து வரும் மஹா படத்தில் இவர் நடித்து வருகிறார். 

இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ்க்கு ஆதரவாக வீடியோ பதிவில் தனது கருத்துக்களை தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதையடுத்து தற்போது சனம் ஷெட்டி, இச்சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருக்கும் தவலை தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து அனைவரும் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க வேண்டும், அப்போது தான் அழுத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I have officially registered my complaint against the accused police officers in the Jeyraj and Bennicks case (the name was wrongly mentioned earlier by the press now corrected) with the Human Rights Commission of India. . Dear friends I request all of you to raise the complaint which will certainly increase chances for effective action in the issue🙏 . The link for web complaint registration as below: https://hrcnet.nic.in/HRCNet/public/webcomplaint.aspx Please use the weblink to fill in details and submit. Check my story to goto the link directly. . You will receive an sms as registration confirmation. Names, place and incident details can be found in all the news writeups regarding the issue. . #justiceforjeyrajandfenix #murdercharges #humanrightscommission #humanrightscomplaint #doyourbit

A post shared by (Only Official Page) (@sam.sanam.shetty) on

மேலும் செய்திகள்

சாத்தான்குளம் சம்பவம் - மனித உரிமை ஆணையத்தில் புகாரளித்த நடிகை | actress sanam shetty files in human rights commission on sathankulam jeyaraj

People looking for online information on Human Rights Commission, Sanam Shetty, Sathankulam Jeyaraj and Fenix will find this news story useful.