www.garudabazaar.com

ஒரு க்ரைம் கத சொல்லட்டுமா? மெரட்டுதே.. விஷாலின் வீரமே வாகை சூடும் டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஷாலின் நடிப்பில், விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.பா. சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள  திரைப்படம் “வீரமே வாகை சூடும் “. 

Vishal Veerame Vaagai Soodum Trailer things to notice

ஒன்லைன்

அதிகார மட்டதிற்கு எதிரான ஒரு சாமானிய மனிதனின் போராட்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. டிரெய்லரை பார்க்கும்போது, விஷாலின் போலீஸ் துறையில் பணிபுரிபவராக வருகிறார்.

Vishal Veerame Vaagai Soodum Trailer things to notice

ஆக்‌ஷன் த்ரில்லர்

அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் மாற்றும் க்ரைம் த்ரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளதையும் டிரெய்லரில் இருந்து காண முடிகிறது. இப்படத்தில் விஷால் ஜோடியாக டிம்பிள் ஹயாதி நாயகியாக நடித்துள்ளார்.

Also Read: போடு சக்க! கடற்கரை.. நீச்சல் உடை.. Beast ஹீரோயின்.. தீயாய் பரவும் படு கிளாமர் Photo!

Vishal Veerame Vaagai Soodum Trailer things to notice

இதர நடிகர்கள்

தவிர யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, RNR மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, KSG வெங்கடேஷ்,  மஹா காந்தி, மரியம் ஜார்ஜ், தீப்தி உள்ளிட்டோரும் படத்தில் நடித்துள்ளனர் என்பதை டிரெய்லரில் காண முடிகிறது. டிரெய்லரின் ஒரு காட்சியில் விஷாலின் பின்னணியில் ரஜினிகாந்த் ஓவியம் இடம் பெறுகிறது. 

வில்லனாக பாபுராஜ்

Vishal Veerame Vaagai Soodum Trailer things to notice

இப்படத்தில் பிரபல மலையாள நடிகரான பாபுராஜ், வில்லனாக நடித்துள்ளார். நடிகர் பாபுராஜ் தமிழில் ஜனா, ஸ்கெட்ச் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய அறிமுகமும் மிரட்டலான காட்சிகளும் இந்த டிரெய்லரில் வெளியாகியுள்ளன. 

Also Read: "ஐத்தலக்கா" .. பிரபல Bigg Boss நடிகருடன் கைகோர்க்கும் ராக் ஸ்டார் அனிருத்! செம சம்பவம்.

டெக்னீசியன்கள் விபரம்

Vishal Veerame Vaagai Soodum Trailer things to notice

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவின் ராஜ்  ஒளிப்பதிவு செய்ய, N.B.ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார். S.S.மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடிவமைப்பு செய்கிறார். ஒலி அமைப்பை தபஸ் நாயக் செய்கிறார்.

ஆக்‌ஷன் காட்சிகள்

Vishal Veerame Vaagai Soodum Trailer things to notice

 

இப்படத்தில் ஆக்‌ஷன் பிளாக் முக்கியமானதாக அமைந்திருக்கிறது. சண்டைப் பயிற்சிகளை அனல் அரசு, ரவி வர்மா, தினேஷ் ஆகியோர் அமைத்துள்ளனர். விளம்பர வடிவமைப்பை கண்ணதாசன் செய்கிறார். மக்கள் தொடர்பு பணிகளை ஜான்சன் செய்கிறார். பாலா கோபி எக்ஸிக்யூட்டிவ் புரடியூசராக பணியாற்றுகிறார்.

Also Read: பரபரப்பு! நடிகையின் வாக்குமூலம்.. நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகிறாரா ஹரி நாடார்?

தொடர்புடைய இணைப்புகள்

Vishal Veerame Vaagai Soodum Trailer things to notice

People looking for online information on Veerame Vaagai Soodum, Vishal, Vishal 32, Vishal 33 will find this news story useful.