www.garudabazaar.com

நடிகர் விஷால் - சுனைனா நடிக்கும் புதிய படம்! படக்குழு போட்ட அடுத்தக்கட்ட மாஸ் பிளான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கி வரும்  திரைப்படம் “வீரமே வாகை சூடும்“ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Vishal have gone on a 30 days long schedule for Lathi

யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவின் ராஜ்  ஒளிப்பதிவு செய்ய, N.B.ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார். S.S.மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடிவமைப்பு செய்கிறார். ஒலி அமைப்பை தபஸ் நாயக் செய்கிறார். அனல் அரசு, ரவி வர்மா, தினேஷ் சண்டைகாட்சிகளை அமைக்கின்றனர். விளம்பர வடிவமைப்பை கண்ணதாசன் செய்கிறார். மக்கள் தொடர்பு பணிகளை ஜான்சன் செய்கிறார். பாலா கோபி எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசராக பணியாற்றுகிறார். 

Vishal have gone on a 30 days long schedule for Lathi

கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஹைதராபாத்தின் பல பகுதிகளிலும்,  சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது. வரும் 2022 ஜனவரி குடியரசுத்தினத்தன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழு தற்போது திரையரங்குகளை உறுதி செய்யும் பணியினை செய்து வருகிறது. இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க,  டிம்பிள் ஹயாதி நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, RNR மனோகர்,  பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, KSG வெங்கடேஷ், மஹா காந்தி, மரியம் ஜார்ஜ், Black sheep தீப்தி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

Vishal have gone on a 30 days long schedule for Lathi

இந்த படத்தை தொடர்ந்து விஷால் நடிக்கும் 32வது திரைப்படம் லத்தி. நெருங்கிய நண்பர்களான ரமணா, நந்தா இருவரும் இணைந்து ராணா புரொடக்‌ஷன்ஸ் என்ற பெயரில் பட நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து லத்தி படத்தை தயாரிக்கிறது.  ஏற்கனவே, சன் டிவியில் ஹிட் அடித்த நிகழ்ச்சியான, விஷால் பங்கு பெற்ற “சன் நாம் ஒருவர்”யை இந்த ராணா புரொடக்‌ஷன்ஸ்  தான் தயாரித்தது. இதை தொடர்ந்து தனது நண்பர்கள்  ரமணா, நந்தா தயாரிக்கும் இப்படத்தில் நடிக்கிறார் விஷால். A. வினோத்குமர் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். அவரே கதை, திரைக்கதை எழுதுகிறார். சாம் CS இப்படத்திற்கு இசையமைக்கிறார், பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். A.வினோத்குமார் & பொன்பார்த்திபன் வசனம் எழுதுகிறார்கள். சுனைனா கதாநாயகியாக நடிக்கிறார்.

Vishal have gone on a 30 days long schedule for Lathi

இந்த படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்களுக்கு முன் நிறைவடைந்தது. விரைவில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் நடக்க உள்ளது. இதற்காக தொடர்ந்து 40 நாட்கள் கால்ஷீட்டை நடிகர் விஷால் தயாரிப்பு நிறுவனத்துக்கு அளித்துள்ளார். அங்கு பீட்டர் ஹெய்ன் இயக்க சண்டைக்காட்சிகள் படமாக்கபட உள்ளன. 

தொடர்புடைய இணைப்புகள்

Vishal have gone on a 30 days long schedule for Lathi

People looking for online information on சுனைனா, லத்தி, விஷால், வீரமே வாகை சூடும், Sunaina, Vishal will find this news story useful.