www.garudabazaar.com

ஒரே படத்தில் இணையும் விஷ்ணு விஷால் & விக்ரம் பிரபு? இயக்குநர் இவரா? செம்ம காம்போவா இருக்கே!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் ஆக்‌ஷன் காமெடி ஜானர்களின் திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டு வருபவர் இயக்குனர் எழில்.

Vishnu Vishal and Vikram Prabhu joining next Ezhil direction

இவர் திரைப்படங்களில் ஆக்‌ஷன் காமெடி மற்றும் ரொமான்ஸ் என ஜனரஞ்சகமான அனைத்தும் இருப்பதால் மக்களிடையே இந்த திரைப்படங்கள் அதிக வரவேற்பைப் பெற்றுவருகின்றன. குறிப்பாக குடும்ப திரைப்படங்கள் என்கிற வகையில் இந்த திரைப்படங்கள் குடும்பங்களால் பார்க்கப்பட்டும் கொண்டாடப்பட்டும் வருகின்றன.

Vishnu Vishal and Vikram Prabhu joining next Ezhil direction

முன்னதாக விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி, சூரி மற்றும் பலர் நடித்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ திரைப்படத்தை எழில் இயக்கி இருந்தார். காமெடி - ரொமான்ஸ் என ஜனரஞ்சகமாக்க வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை குடும்ப ஆடியன்ஸிடம் பெற்றது.

Vishnu Vishal and Vikram Prabhu joining next Ezhil direction

குறிப்பாக இந்த திரைப்படத்தில் வரும் அல்டிமேட் காமெடி அனைவரிடையே மிகவும் பிரபலமானது. ரோபோ ஷங்கர் இப்படத்தில் எதை சொன்னாலும் மறந்துவிட்டு முதலிலிருந்து தான் சொல்வார். அந்த காமெடி இந்த திரைப்படத்தில் நன்றாகவே வேலை செய்தது.

Vishnu Vishal and Vikram Prabhu joining next Ezhil direction

இதேபோல் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா மற்றும் பலர் நடித்த திரைப்படம் வெள்ளைக்கார துரை. இந்த திரைப்படத்திலும் ஆக்‌ஷன், காமெடி, ரொமான்ஸ் மற்றும் பாடல்கள் என அனைத்துமே வெகுவாக வெகுஜன மக்களிடையே கவர்ந்தன. இந்நிலையில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ரம் பிரபு இருவரும், இயக்குனர் எழில் இயக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் இணைவதாக தகவல்கள் தெரிய வந்துள்ளன.

Vishnu Vishal and Vikram Prabhu joining next Ezhil direction

இந்த திரைப்படத்தை  தயாரிப்பாளர் அம்பேத்குமார் தயாரிப்பதாகவும் தகவல்கள் தெரியவந்திருக்கிறது. தயாரிப்பாளர் அம்பேத்குமார், இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்து வெளிவந்த ஜிப்ஸி திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vishnu Vishal and Vikram Prabhu joining next Ezhil direction

எனினும் அம்பேத்குமார் தயாரிப்பில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ரம் பிரபு இணைந்து, இயக்குநர் எழில் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தெரியவந்துள்ள இந்த நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் குறித்து, படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vishnu Vishal and Vikram Prabhu joining next Ezhil direction

People looking for online information on S Ezhil, Velainu Vandhutta Vellaikaaran, Vellaikaara Durai, Vikram Prabhu, Vishnu Vishal will find this news story useful.