www.garudabazaar.com

GV பிரகாஷ், சிம்புவைத் தொடர்ந்து விஷாலை இயக்கும் இளம் இயக்குநர்.. வெளியான #Vishal33 வேறமாரி அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஷால் அண்மையில் ஆர்யாவுடன் இணைந்து ‘எனிமி’ திரைப்படத்தில் நடித்தார்.

GV Prakash Simbu movies director to direct vishal33 mass update

இந்த திரைப்படத்தை, ‘ஆனந்த் ஷங்கர்’ இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து, விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.ப.சரவணன் இயக்கி வரும் விஷாலின் 31-வது  திரைப்படமான, “வீரமே வாகை சூடும்” படத்திலும் விஷால் நடித்து முடித்துள்ளார்.

GV Prakash Simbu movies director to direct vishal33 mass update

இந்த படத்தை தொடர்ந்து விஷால் நடிக்கும் 32வது திரைப்படம் லத்தி. விஷாலின் நண்பர்களான ரமணா, நந்தா இணைந்து ராணா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் லத்தி படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்தில் A. வினோத்குமார் இயக்குநராக அறிமுகமாகிறார்.

சாம் CS இப்படத்திற்கு இசையமைக்கிறார், பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். சுனைனா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்க உள்ளது.

GV Prakash Simbu movies director to direct vishal33 mass update

இந்த நிலையில் விஷால் நடிக்கும் 33-வது திரைப்படத்தைப் பற்றிய பரபரப்பான அறிவிப்பை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், தம் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அதன்படி, மிகப்பெரிய பட்ஜெட்டில் பான் இந்திய திரைப்படத்தை விஷால் நடிப்பில் இயக்க உள்ளதாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

GV Prakash Simbu movies director to direct vishal33 mass update

திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விஷால் அண்ணா நடிப்பில் மற்றும் தயாரிப்பாளர் வினோத் அவர்களின் தயாரிப்பிலான டெஸ்ட் ஷூட் இன்று நிறைவடைந்தது.

மேற்படி இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 2002 ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்றும், அதேசமயம் இதர படக்குழுவினருடைய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

GV Prakash Simbu movies director to direct vishal33 mass update

People looking for online information on Aadhik Ravichandran, Silambarasan TR, Simbu, Vishal, Vishal33 will find this news story useful.