விஷால்-மிஷ்கினின் ’துப்பறிவாளன் 2’ டீமின் Chill Bro -இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 19, 2019 12:12 PM
2017ம் ஆண்டு மிஷ்கினின் இயக்கத்தில் விஷால் நடித்து வெளியான துப்பறிவாளன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘சைக்கோ’ திரைப்படத்தை இயக்கிய மிஷ்கின் மீண்டும் விஷாலுடன் இணைந்து 'துப்பறிவாளன் 2' படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தில் இவருடன் ஆஷியா, நாசர், கவுதமி ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். லண்டனில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ’துப்பறிவாளன் 2’ படத்தில் நடிக்கும் முன்னா சைமனுடன் விஷால் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ’ஷூட்டுக்கு பிறகு லண்டனின் கிறிஸ்துமஸ் குளிரில் Chill செய்கிறோம்’ என்று அந்த புகைப்படத்துக்கு கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.
Chilling during the Christmas Season in U.K. after shoot for #Thupparivaalan2 #Detective2 pic.twitter.com/tHV5Uvp6PI
— Vishal Film Factory (@VffVishal) December 19, 2019