''என் புருஷன் பண்றாரு, நானும் பண்ணுவேன்'' - பதிலடி கொடுத்த ஜோதிகா
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 19, 2019 11:16 AM
கார்த்தி, ஜோதிகா முதன்முறையாக இணைந்து நடித்துள்ள படம் 'தம்பி'. இந்த படத்தை 'பாபநாசம்' பட இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். வியாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் பேரலெல் மைன்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன.

ஜோதிகாவும் கார்த்தியும் அக்கா - தம்பியாக நடித்துள்ள இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் சீதா, சௌகார் ஜானகி, இளவரசு, ஆன்சன் பால், பாலா, அம்மு அபிராமி, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்த படத்துக்கு '96' புகழ் கோவிந்த வசந்தா இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். டிசம்பர் 20-ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து ஜோதிகா, கார்த்தி, நிகிலா விமல், இயக்குநர் ஜீத்து ஜோசப் உள்ளிட்டோர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
அப்போது செய்தியாளர் ஒருவர் இந்த படத்தில் குதிரையில் செல்கிறீர்கள் ? போலீஸ் போன்று எதாவது வேடத்தில் வருகிறீர்களா? என்று கேட்டார். அதற்கு என் புருஷன் பண்றாங்க, நானும் பண்றேன், அவங்க என்னலாம் பண்றாங்களோ நானும் பண்ணுவேன்'' என்று ஜாலியாக பதிலளித்தார். அருகில் இருந்த கார்த்தி குலுங்கி சிரித்தார்.
''என் புருஷன் பண்றாரு, நானும் பண்ணுவேன்'' - பதிலடி கொடுத்த ஜோதிகா வீடியோ