விஷாலுக்கு ஜோடியாகும் 'துருவ நட்சத்திரம்' பட நடிகை - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 16, 2019 04:02 PM
சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்திருந்த 'ஆக்சன்' திரைப்படம் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி வெளியாகியிருந்தது. விஷால் ராணுவ அதிகாரியாக நடித்திருந்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்திருந்தனர்.

டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருந்தார். இதனையடுத்து விஷால், மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன் 2' படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில் 'அரிமா நம்பி', 'இருமுகன்', 'நோட்டா' படங்களின் இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். இந்த படம் பெரும்பாலான காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்படவிருக்கின்றன.
இந்நிலையில் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக 'எவ்விடே சுப்ரமண்யம்', பெல்லி சூப்புலு உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்த ரிது வர்மா நடிக்கிறார். இவர் தமிழில் தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி 2', கௌதம் மேனன் மற்றும் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' படங்களில் நடித்திருந்தார்.