Breaking: பெயர் மாறுகிறதா உதயநிதி - மிஷ்கினின் 'சைக்கோ' ?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 14, 2019 08:49 PM
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் 'சைக்கோ'. இந்த படத்துக்காக இசைஞானி இளையராஜா இசையில் சித் ஸ்ரீராம் பாடிய உன்ன நெனச்சு பாடல் வெளியாகி மிகவும் பிரபலமானது.

இந்த படத்தை டபுள் மீனிங் புரொடக்சன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் இயக்குநர் ராம், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் 'சைக்கோ' என்ற தலைப்புக்கு சென்சார் போர்டு மறுப்பு தெரிவித்ததாகவும் ஆனால் படக்குழு Revising Committee மூலம் விண்ணப்பித்து சைக்கோ தலைப்புக்கு அனுமதி பெற்றுள்ளதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணமாக சைக்கோ படத்தலைப்பு உறுதியாகியுள்ளது.
Tags : Psycho, Mysskin, Udhayanidhi Stalin, Ilaiyaraaja