"கிச்சு கிச்சு மூட்டிக்கிட்டே இருக்காரு.." - பிகில் Audio Launch குறித்து அரசியல் பிரபலம்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 13, 2019 04:09 PM
இயக்குநர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்.19ம் தேதி சென்னை சாய் ராம் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
வழக்கமாக தனது திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மோட்டிவேஷனல் ஸ்பீச் கொடுப்பது நடிகர் விஜய்யின் வழக்கம். இசை வெளியீட்டு விழாவை காட்டிலும், விஜய் கூறும் குட்டி கதைக்கு அவரது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில், Behindwoods-க்கு பிரத்யேக பேட்டியளித்த நடிகரும், அரசியல் விமர்சகருமான நாஞ்சில் சம்பத், நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். ‘சர்கார்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பற்றி பேசியது போல் நடிகர் விஜய், ‘பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசுவாரா என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த நாஞ்சில் சம்பத், ‘கொஞ்ச நாட்களாகவே நடிகர் விஜய் கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டே இருக்கிறார். வெளிப்படையகாவே சொல்லலாம். அவரது தந்தையிடம் கேட்டேன், ஏனா முதல்வராக ஆனால் நடிக்க மாட்டேன் என விஜய் கூறியிருந்தார்’.
‘மக்கள் மத்தியில் ஈர்ப்புள்ள நடிகர்கள் என்று பார்த்தால், நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா ஆகியோர் அரசியலுக்கு வரலாம். அப்படி, வந்தால் அது அவர்களுக்கு சவாலான வேலையாக இருக்கும். அதை அவர்கள் துணிந்து ஏற்றுக் கொள்வார்களா என்பது தெரியவில்லை. துணிந்து ஏற்றுக் கொண்டு மண் சார்ந்தும், மொழி சார்ந்தும் கொள்கைகளை வகுத்துக் கொண்டு பயணித்தால் அதன் பிறகு நான் கருத்துக் கூற முடியும்’ என்றார்.
மேலும், ‘ஜனரஞ்சகமான கலைஞராக விஸ்வரூபம் எடுத்துள்ள விஜய், ஒருவேளை அரசியலுக்கு வந்தால் அனைத்து கட்சிகளுக்கும் பாதிப்பை உண்டாக்கும், சிறிய சாதி கட்சிகள், மதம் சார்ந்த வகுப்பு வாத கட்சிகளுக்கு பெரும் ஆபத்து ஏற்படும்’ என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
"கிச்சு கிச்சு மூட்டிக்கிட்டே இருக்காரு.." - பிகில் AUDIO LAUNCH குறித்து அரசியல் பிரபலம் வீடியோ