விஷால் - சுந்தர்.சியின் ஆக்சனில் இந்த நடிகர் டபுள் ஆக்சன்! - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 29, 2019 10:35 AM
'ஆம்பள' படத்துக்கு பிறகு விஷால் - சுந்தர்.சி இணைந்துள்ள படம் 'ஆக்சன்'. இந்த படத்தை டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார்.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்க, யோகி பாபு, கபீர் துஹான் சிங் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தில் விஷால் ராணுவ அதிகாரி வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும், இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் கபிர் சிங் இரட்டை வேடங்களில் நடிக்கவிருப்பதாகவும் எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.