விஷால் மற்றும் அனிஷாவின் திருமணம் நிறுத்தமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'அயோக்யா' படத்துக்கு பிறகு விஷால், சுந்தர்.சி இயக்கத்தில் 'ஆக்ஷன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்தது.

Actor Vishal and Anisha's Marriage said to be called off

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்க, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார்.

நடிகர் விஷால் தனக்கும் அனிஷா அல்லா ரெட்டி என்கிற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். இந்த திருமணம் வருகிற அக்டோபர் மாதம் நடைபெறும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த திருமணம் நிறுத்தப்பட்டுள்ளதாக எங்களுக்கு அப்டேட் கிடைத்துள்ளது. ஆனால் இது பற்றி விஷால் மற்றும் அனிஷா தரப்பில் இருந்து எந்த தகவலும் இல்லை. ஆனால், அனிஷா சமூக வலைதளங்களில் பதிவேற்றிய நிச்சயதார்த்த புகைப்படத்தை அவர் நீக்கி விட்டதாக கூறப்படுகிறது.

விஷால் மற்றும் அனிஷாவின் திருமணம் நிறுத்தமா? வீடியோ