Kaateri logo top
www.garudabazaar.com

ரோலக்ஸ் கூட டில்லி.. மதுரையை அலற விட்ட சூர்யா & கார்த்தி! வைரல் ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மதுரையில் விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கார்த்தி- சூர்யா இணைந்து எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Viruman Movie Audio Launch Suriya with Karthi

2D நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்க, முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடித்துள்ள படம், ’விருமன்’. இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் , இந்தப் படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார்.  இந்தப் படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தில், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சரண்யா, கருணாஸ், சூரி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Viruman Movie Audio Launch Suriya with Karthi

‘விருமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரே உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் இந்த இசை வெளியீட்டு விழா நடந்து வருகிறது.

இந்த விழாவில், இயக்குநர் பாரதிராஜா,  இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சூரி, நடிகை அதிதி ஷங்கர், இயக்குநர் முத்தையா, இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன்  உட்பட படக்குழுவினர் பங்கேற்கின்றனர் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Viruman Movie Audio Launch Suriya with Karthi

இந்நிலையில் விழாவில் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி வேட்டி சட்டையில் எடுத்த புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சூர்யா மேடைக்கு வரும் போது ரோலக்ஸ் என ரசிகர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர்.

Viruman Movie Audio Launch Suriya with Karthi

இந்த விழாவில், இரண்டு பாடல்களுக்கு மேடையில் நடனமாடுகிறார்கள். ஒரு பாடலுக்கு நடன இயக்குநர் சாண்டி குழுவினரும் மற்றொரு பாடலுக்கு விஜய் டிவி அமீர் - பாவனியும் நடனமாடுகின்றனர்.

Also Read | 9 வருடங்களுக்கு பிறகு நடிக்க வரும் பிரபல 80ஸ் நடிகை.. அதுவும் சிவகார்த்திகேயன் கூடவா? சூப்பரு!

தொடர்புடைய இணைப்புகள்

Viruman Movie Audio Launch Suriya with Karthi

People looking for online information on Karthi, Suriya, Viruman, Viruman Movie Audio Launch will find this news story useful.