Kaateri logo top
www.garudabazaar.com

மஞ்சள் சட்டை வெள்ளை வேட்டியில் கார்த்தி.. விருமன் Audio Launch Special போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விருமன் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

Karthi Starring Viruman Movie New Poster Released

Also Read | BREAKING: விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழா.. மதுரைல எங்கே நடக்குது? முழு தகவல்

2D நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்க, முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடித்துள்ள படம், ’விருமன்’. இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் , இந்தப் படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். இதில், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சரண்யா, கருணாஸ், சூரி உட்பட பலர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

Karthi Starring Viruman Movie New Poster Released

இப்படம் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தினை தமிழகம் முழுவதும் சக்தி பிலீம் பேக்டரி நிறுவனம் ரிலீஸ் செய்ய உள்ளது.

‘விருமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் இன்று (ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி) இந்த இசை வெளியீட்டு விழா நடக்கிறது. இந்த விழாவில் படத்தின் டிரெய்லரும் வெளியிடப்படுகிறது. இதனை முன்னிட்டு படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. மஞ்சள் சட்டை வெள்ளை வேட்டியில் கார்த்தி காட்சியளிக்கிறார்.  கோவில் திருவிழா பின்னணியில் போஸ்டர் அமைந்துள்ளது.

Karthi Starring Viruman Movie New Poster Released

இந்த விழாவில், இயக்குநர் பாரதிராஜா,  இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சூரி, நடிகை அதிதி ஷங்கர், இயக்குநர் முத்தையா,

இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன்  உட்பட படக்குழுவினர் பங்கேற்கின்றனர்.

Karthi Starring Viruman Movie New Poster Released

இந்த விழாவில், இரண்டு பாடல்களுக்கு மேடையில் நடனமாடுகிறார்கள். ஒரு பாடலுக்கு நடன இயக்குநர் சாண்டி குழுவினரும் மற்றொரு பாடலுக்கு விஜய் டிவி அமீர் - பாவனியும் நடனமாடுகின்றனர்.

Also Read | விருமன் படத்தின் “மதுரை வீரன்" பாடல் வீடியோ ப்ரோமோ.. அதிதி ஷங்கரின் அசத்தல் டான்ஸ் & VOICE!

தொடர்புடைய இணைப்புகள்

Karthi Starring Viruman Movie New Poster Released

People looking for online information on Karthi, Viruman, Viruman Movie New Poster will find this news story useful.