அதர்வா நடிக்கும் ரொமாண்டிக் படத்தின் அப்டேட்
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 17, 2019 07:41 PM
அதர்வா மற்றும் அனுபமா இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்து வரும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்து வருகிறார். மசாலாபிக்ஸ் உடன் இணைந்து எம்.கே.ஆர்.பி புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், இயக்குநர் ஆர்.கண்ணன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது.
96 திரைப்படத்திற்கு காட்சிகள் ஒளிப்பதிவு செய்த சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். கபிலன் வைரமுத்து வசனம் எழுதுகிறார். இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் கடந்த மாதம் துவங்கி தொடர்ச்சியாக 20 நாட்கள் நடைபெற்றது.
தற்போது முதற்கட்ட ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Tags : Atharvaa, Anupama Parameshwaran, R Kannan